சினிமா

திடீரென ஒத்திவைக்கப்பட்ட சமந்தா படம்.. எப்போது வெளியாகும் ? - படக்குழு கூறுவது என்ன ?

சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தியவைக்கப் பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

திடீரென ஒத்திவைக்கப்பட்ட சமந்தா படம்.. எப்போது வெளியாகும் ? - படக்குழு கூறுவது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர், அத்தனை மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். சினிமா ஒரு புறம் இருக்க, காதலும் ஒரு புறம் இருந்தது. பல ஆண்டுகளாக இவரும் பிரபல தெலுங்கு திரை நட்சத்திரமான நாக சைதன்யாவும், காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திடீரென ஒத்திவைக்கப்பட்ட சமந்தா படம்.. எப்போது வெளியாகும் ? - படக்குழு கூறுவது என்ன ?

சுமூகமாக இருந்த இவர்களது உறவு கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருவரும் அவர்களது தனித்தனி வாழ்க்கையில் சினிமா, சீரிஸ் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியில் வெளியான 'The Family Man 2' சீரிஸின் மூலம் பாலிவுட்டில் சமந்தா மிகவும் பிரபலமானார் . இவர்களின் விவாகரத்திற்கு இந்த சீரிஸும் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

திடீரென ஒத்திவைக்கப்பட்ட சமந்தா படம்.. எப்போது வெளியாகும் ? - படக்குழு கூறுவது என்ன ?

தற்போது தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தனது தனிப்பாதையில் மூவிஸ், சீரிஸ் என நடித்து வரும் இவருக்கு, அண்மையில் மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூனே பிரச்னை (autoimmune disorder) பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சை காரணமாக நடிப்பில் இருந்து சில மாதங்கள் விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி சாகுந்தலம் என்ற படத்தை நிறைவு செய்துள்ளார்.

திடீரென ஒத்திவைக்கப்பட்ட சமந்தா படம்.. எப்போது வெளியாகும் ? - படக்குழு கூறுவது என்ன ?

இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதோடு இதன் வெளியீட்டு தேதியும் வரும் பிப்ரவரி 17 என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இதன் ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திடீரென ஒத்திவைக்கப்பட்ட சமந்தா படம்.. எப்போது வெளியாகும் ? - படக்குழு கூறுவது என்ன ?

இதுகுறித்து படக்குழு வெளில்யிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சாகுந்தலம் திரைப்படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி எங்களால் வெளியிட முடியாது என்பதை எங்கள் அன்பான பார்வையாளர்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம். உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி" குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

தற்போது சமந்தா, விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து 'குஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் 60% நிறைவுற்றதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் தேவரக்கொண்டா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories