சினிமா

'சாகுந்தலம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் கண்கலங்கிய சமந்தா.. நடந்து என்ன?

சாகுந்தலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா கண் கலங்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

'சாகுந்தலம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் கண்கலங்கிய சமந்தா.. நடந்து என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் நான்கே வருடத்தில் இவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தினார் சமந்தா. 'புஷ்பா' படத்தில் வெளியான 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதை மேலும் கொள்ளைக்கொண்டார். பின்னர் இவர் தமிழில் நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வெளியானது.

பின்னர் 'யசோதா' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கு 'மயோசிடிஸ்' என்ற ஆட்டோ இம்யூனோ பிரச்சனை இருப்பதாக 2022ம்ஆண்டு நவம்பர் 11ம் தேதி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதைப்பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டனர்.

தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததால் படங்களில் நடிப்பதில் இருந்து நடிகை சமந்தா விலகுவதாக கூறப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாதபோதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த பிரச்சனை இருக்கும்போதுதான் 'யசோதா' படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி வரவேற்றை பெற்றது.

'சாகுந்தலம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் கண்கலங்கிய சமந்தா.. நடந்து என்ன?

இதன் பிறகு சாகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குநர் குணசேகரன், 'சாகுந்தலம் படத்தின் நிஜ ஹீரோ சமந்தாதான்' என கூறினார்.

இவரின் இந்த பேச்சைக் கேட்டபோது மேடையில் அமர்ந்திருந்த நடிகை சமந்தா கண்கலங்கினார். இவர் கண்கலங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் நான்கு மொழிகளிலும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது.

banner

Related Stories

Related Stories