சினிமா

சூர்யா, அஜித் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்த கலைஞர் திடீர் மரணம்: இந்திய திரையுலகம் அதிர்ச்சி!

பிரபல தெலுங்கு டப்பிங் கலைஞர் ஶ்ரீனிவாச மூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தார்.

சூர்யா, அஜித் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்த கலைஞர் திடீர் மரணம்: இந்திய திரையுலகம் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அஜித், சூர்யா, விக்ரம், மோகன்லால் என பல நடிகர்களின் தெலுங்கு படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் ஶ்ரீனிவாச மூர்த்தி. இவர் 1990 களில் தனது டப்பிங் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இயக்குநர் சங்கரின் முதல்வன் படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'ஒக்கே ஒக்கடு' படத்தில் அர்ஜூனுக்கு தெலுங்கு குரல் கொடுத்துப் பிரபலமடைந்தார்.

சூர்யா, அஜித் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்த கலைஞர் திடீர் மரணம்: இந்திய திரையுலகம் அதிர்ச்சி!

அதேபோல் நடிகர் சூர்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் இவர் தான் குரல். அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ஆர்.மாதவனின் சமீபத்திய படமான 'ராக்கெட்ரி' படங்களுக்குத் தெலுங்கில் டப்பிங் செய்துள்ளார். கிட்டத்தட்ட 1,000 படங்களுக்கு மேல் ஶ்ரீனிவாச மூர்த்தி பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் இவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரின் மரணத்தை அடுத்து தெலுங்கு, தமிழ் சினிமா பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்ரீனிவாச மூர்த்தி மறைவுக்கு நடிகர் சூர்யா தனது இரங்கலை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்” இது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு. ஸ்ரீனிவாசமூர்த்தி உங்களுடைய குரல் மற்றும் உணர்ச்சிகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது.” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories