சினிமா

“16 வருட போலிஸ் வாழ்க்கையில முதல்முறையா ஒரு திருடன பிடிச்சுருக்கேன்..” - ரியல் போலிஸ் ஜிபின் கோபிநாத் !

ரியல் போலிசும் நடிகருமான ஜிபின் கோபிநாத், தான் இந்த 16 வருடத்தில் முதல் முறையாக ஒரு திருடனை பிடித்ததிருப்பதாக தெரிவித்துள்ளார்.

“16 வருட போலிஸ் வாழ்க்கையில முதல்முறையா ஒரு திருடன பிடிச்சுருக்கேன்..” - ரியல் போலிஸ் ஜிபின் கோபிநாத் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக படிக்கும்போதே வேலை பார்ப்பது என்பது ஒரு சிலரின் பழக்கம்; வேலை பார்த்துக்கொண்டே மற்றொரு வேலை பார்ப்பது என்பது ஒரு சிலரின் பழக்கம்; அதே போல் இப்போதுள்ள நடிகர்கள் நடிகைகள், தாங்கள் நடித்துக்கொண்டே சொந்த பிசினஸ் பார்த்தும் வருகின்றனர்.

இப்படி இருக்கையில் கேரளாவில் போலீஸ் வேலை உள்ளிட்ட அரசு பணிகளில் இருந்துகொண்டே நடிப்பவர்கள் சிலர் இருக்கின்றனர். அப்படி ஒருவர்தான் ஜிபின் கோபிநாத்.

“16 வருட போலிஸ் வாழ்க்கையில முதல்முறையா ஒரு திருடன பிடிச்சுருக்கேன்..” - ரியல் போலிஸ் ஜிபின் கோபிநாத் !

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜிபின் கோபிநாத், போலிஸ் கன்ட்ரோல் ரூமில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். பணியின்போதே சில நேரங்களில் படங்களிலும் நடித்து வருகிறார். 'மின்னல் முரளி', 'கோல்டு கேஸ்', 'தி கிரேட் ஃபாதர்' உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.

சொந்தமாக ஒரு கார் வைத்திருக்கும் இவர், தனது வீட்டின் பக்கத்தில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால், வீட்டுக்குச் செல்லும் பாதையில் தனது காரை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்றும் தனது காரை அங்கே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து தனது குழந்தைக்கு சாக்லேட் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்த இவர், சாலையோரம் நின்றிருந்த கார் டிரைவர் சீட்டில் ஒருவர் அமர்ந்திருப்பதை கண்டார்.

“16 வருட போலிஸ் வாழ்க்கையில முதல்முறையா ஒரு திருடன பிடிச்சுருக்கேன்..” - ரியல் போலிஸ் ஜிபின் கோபிநாத் !

பிறகு அந்த கார் அருகே ஆட்டோ ஒன்று இருப்பதையும், அந்த ஆட்டோவில் அமர்ந்திருந்த ஒருவர் அந்த காரில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை எடுப்பதையும் கண்டார். பின்னரே அது தனது கார் என்பதை உணர்ந்த இவர், விரைவாக அங்கு சென்று திருடியவரை கையும் களவுமாக பிடித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்.

தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த திருடன் பெயர் நிதிஸ் என்றும், அவர் கார் ஷோ ரூம் ஒன்றில் வேலை செய்துவருவதும் தெரியவந்தது. இதயடுத்து அந்த திருடனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“16 வருட போலிஸ் வாழ்க்கையில முதல்முறையா ஒரு திருடன பிடிச்சுருக்கேன்..” - ரியல் போலிஸ் ஜிபின் கோபிநாத் !

இது குறித்து ஜிபின் கோபிநாத் தனது முகநூல் பக்கத்தில், "எனது 16 வருட போலீஸ் வாழ்க்கையில் இதுவரை ஒரு திருடனைக்கூடப் பிடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான், மாலை 6:20 மணிக்கு மகனின் சாக்லேட் ஆசையை நிறைவேற்ற அருகிலிருக்குள் கடைக்கு பைக்கில் செல்வதற்காகக் கிளம்பினேன்.

சின்ன கேட்டைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது, எனது கார் டிரைவர் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்தார். எதற்காக அவர் இருக்கிறார் என அறிந்துகொள்வதற்காக அவர் வெளியே வரும்வரை காத்திருந்தேன்.

அந்த நபர் தனது கையில் காரில் இருந்த ஆடியோ, வீடியோ மானிட்டர் சிஸ்டத்தை எடுத்துக்கொண்டு கீழே இறங்கியவர், ஒரு புன்னகையுடன் என்னைப் பார்த்தார். அவரிடம், `இங்கு என்ன நடக்கிறது?' எனக் கேட்டேன். 'ஏய் ஒன்றும் இல்லை' என அப்பாவி போல் சொன்னார். `கையில் என்ன?' என்று கேட்டேன். `ஸ்டீரியோ' என பதில் சொன்னவரிடம், `எங்கு போகிறீர்கள்?' எனக் கேட்டேன். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது என்பதை உணர்ந்த அவர், 'சார் ஒரு தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள்' என்றார்.

உடனே அவரது காலரைப் பிடித்து அருகிலுள்ள கடைக்கு கொண்டுபோய் நிறுத்தினேன். அடுத்ததாக போலீஸ், பத்திரிகையினர் எல்லோரும் வந்தார்கள், மியூசியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒருவழியாக என் காரில் திருடியவரைப் பிடித்து 16 வருட போலீஸ் சர்வீஸில் ஒரு திருடனைக்கூடப் பிடிக்கவில்லை என்ற பாவத்தை கழுவிவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories