சினிமா

செல்ஃபி எடுக்கும் போது கடுப்பான நடிகர் ரன்பீர் கபூர்.. ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்ததால் பரபரப்பு!

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் ரன்பீர் கபூர் தூக்கி எறியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்ஃபி எடுக்கும் போது கடுப்பான நடிகர் ரன்பீர் கபூர்.. ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்ததால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பிரம்மாஸ்திரா' படம் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.

அந்த படத்தை அடுத்து நடிகர் ரன்பீர் கபூர் 'தூ ஜூதி மெயின் மக்கார்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் ரன்பீர் கபூர் தூக்கி எறியும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ரசிகர் ஒருவர் நடிகர் ரன்பீர் கபூருக்கு அருகே நின்று கொண்டு செல்ஃபி எடுக்க முயல்கிறார். அப்போது செல்போனில் க்ளிக் செய்தும் செல்ஃபி படம் விழவில்லை. இதனால் மீண்டும் அந்த ரசிகர் முயன்றுள்ளார். அப்போதும் க்ளிக் ஆகவில்லை. இதனால் கடுப்பான நடிகர் ரன்பீர் கபூர் ரசிகரின் செல்போனை வாங்கி பின்னாடி தூக்கி வீசும் காட்சி பதிவாகியுள்ளது.

செல்ஃபி எடுக்கும் போது கடுப்பான நடிகர் ரன்பீர் கபூர்.. ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்ததால் பரபரப்பு!

இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகர் ரன்பீர் கபூருக்கு எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். ரன்பீர் திமிர் பிடித்தவர், விளம்பர யுக்திக்காக இப்படி செய்கிறார், இது அவர்மீதான மரியாதையைக் குறைத்துவிட்டது என்று பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு #angryranbirkapoor என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகின்றனர்.

தொடர்ச்சியாகவே பிரபல நடிகர்கள் செல்ஃபி எடுக்க வரும் ரசிகர்களிம் இப்படி ஆவேசமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. இது அவர்களுக்கு கெட்ட பெயர்களை வாங்கி கொடுத்தாலும், ரசிகர்களும் பொது இடங்களில் நடிகர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

banner

Related Stories

Related Stories