தமிழ்நாடு

அசாம் To சென்னை.. நாடுவானில் பறந்த விமானத்தில் அலறல் சத்தம் : திடீரென உயிரிழந்த பயணி!

அசாமில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் To சென்னை..  நாடுவானில் பறந்த விமானத்தில் அலறல் சத்தம் : திடீரென உயிரிழந்த பயணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று 134 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் கவுகாத்தியைச் சேர்ந்த சஜீத் அலி என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார்.

பிறகு விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் பயணித்த சஜீத் அலிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து அவருடன் பயணித்தசகோதரர் ராஜேஷ் அலி விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்துள்ளார்.

அசாம் To சென்னை..  நாடுவானில் பறந்த விமானத்தில் அலறல் சத்தம் : திடீரென உயிரிழந்த பயணி!

இதையடுத்து இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாகத் தகவல் கொடுத்து, விமானத்தில் பயணிக்கும் ஒரு பயணிக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே இந்த விமானத்தைத் தரை இருக்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

பின்னர் முன் அனுமதி பெற்று விமானம் 20 நிமிடம் முன்னதாகவே சென்னையில் தரையிறங்கியது. அங்குத் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சஜீத் அலியைப் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதைக்கேட்டு உடன் வந்த அவரது சகோதரர் அதிர்ச்சியடைந்தார்.

அசாம் To சென்னை..  நாடுவானில் பறந்த விமானத்தில் அலறல் சத்தம் : திடீரென உயிரிழந்த பயணி!

இதையடுத்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சஜீத் அலி ஏற்கனவே, கல்லீரல் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்ததும், மேல் சிகிச்சைக்காகக அவரது சகோதரருடன் விமானத்தில் வந்த போது உடல் நிலை பாதிப்படைந்து அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories