சினிமா

KGF நடிகரை மணந்த தமிழ்ப்பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தின் வைரலாகும் புகைப்படங்கள் !

நடிகை ஹரிபிரியாவுக்கும், நடிகர் வசிஷ்டா நிரஞ்சன் சிம்ஹாவுக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

KGF நடிகரை மணந்த தமிழ்ப்பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தின் வைரலாகும் புகைப்படங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2007-ல் துளு மொழியில் வெளியான ஒரு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹரி பிரியா. அதன்பிறகு கன்னட மொழியில் நடித்த இவர், 2010 கரண் நடிப்பில் வெளியான 'கனகவேல் காக்க' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அர்ஜுனுடன் 'வல்லக்கோட்டை, 'முரண்' ஆகிய படங்களில் நடித்த இவர், அதன்பிறகு மீண்டும் கன்னட மொழியில் நடிக்க தொடங்கினார்.

KGF நடிகரை மணந்த தமிழ்ப்பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தின் வைரலாகும் புகைப்படங்கள் !

தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் மீண்டும் கன்னட திரையுலகில் பிசியாக நடிக்க தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கிலும், மலையாளத்திலும் நடித்து வந்த இவர், கடந்த ஆண்டு (2022) சசிகுமார் நடிப்பில் வெளியான 'நான் மிருகமாய் மாற' என்ற படத்தில் மீண்டும் தமிழ் திரையுலகில் தோன்றினார்.

KGF நடிகரை மணந்த தமிழ்ப்பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தின் வைரலாகும் புகைப்படங்கள் !

அதுபோல் கன்னடத்தில் பிரபல நடிகராக இருப்பவர் வசிஷ்டா நிரஞ்சன் சிம்ஹா. இவர் தமிழில் 2016-ல் வெளியான 'கரை ஓரம்' என்ற படத்தில் நடித்துள்ளார். யஷ் நடிப்பில் வெளியான KGF, KGF 2 படங்களிலும் நடித்துள்ளார். KGF படத்தில் கமல் என்ற கதாபத்திரத்திம் மூலம் இந்திய அளவிலுள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானமார்.

KGF நடிகரை மணந்த தமிழ்ப்பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தின் வைரலாகும் புகைப்படங்கள் !

தொடர்ந்து கன்னட படத்தில் நடித்து வரும் இவர், தனுஷின் அசுரன் ரீமேக்கில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான 'நரப்பா' உள்ளிட்ட 3 தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

KGF நடிகரை மணந்த தமிழ்ப்பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தின் வைரலாகும் புகைப்படங்கள் !

சமீபத்தில் ஹரி பிரியாவுக்கும், நடிகர் வசிஷ்டா நிரஞ்சன் சிம்ஹாவுக்கும் கடந்த டிசம்பர் 3-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரது திருமணமும் நேற்று மைசூரில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு சிவராஜ்குமார் உள்ளிட்ட கன்னட திரையுலகினர் நேரில் சென்று வாழ்த்தினர்.

KGF நடிகரை மணந்த தமிழ்ப்பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தின் வைரலாகும் புகைப்படங்கள் !
KGF நடிகரை மணந்த தமிழ்ப்பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தின் வைரலாகும் புகைப்படங்கள் !

தற்போது வசிஷ்டா நிரஞ்சன் சிம்ஹாவுக்கு கன்னடத்தில் 2 படங்களும், ஹரி பிரியாவுக்கு கன்னடத்தில் 7 படங்களும் கைவசம் உள்ளது. இந்த படங்களில் எல்லாம் நடித்து முடித்த பிறகு சற்று ஓய்வெடுக்கப்போவதாக நடிகை ஹரி பிரியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரது திருமணத்திற்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories