சினிமா

“எனக்கும் அவனுக்கும்தான் போட்டியே” -களத்தில் இறங்கிய கோபி-சுதாகர்: பரிதாபங்கள் தயாரிப்பில் உருவாகும் படம்

பரிதாபங்கள் கோபி - சுதாகர் நடிப்பில் உருவாகும் முதல் படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

“எனக்கும் அவனுக்கும்தான் போட்டியே” -களத்தில் இறங்கிய கோபி-சுதாகர்: பரிதாபங்கள் தயாரிப்பில் உருவாகும் படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள இணைய உலகில் அனைவரும் மொபைல் போன்கள் இல்லாமல் இருக்க முடியாது. அதிலும் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக அமைய கூடியதுதான் முகநூல், Youtube உள்ளிட்ட ஆப்கள். அதிலும் Youtube பக்கம் மக்கள் தங்கள் பொழுதை நன்றாக கழிக்கின்றனர்.

அப்படி Youtube-ல் மக்களுக்கு பொழுதுபோக்காக அதிகம் பேர், சேனல் ஒன்றை உருவாக்கி காமெடி, சீரியல், என்று பலவற்றை பதிவேற்றுகின்றனர். Youtube-ல் தோன்றுபவர்கள் மிகவும் பிரபலங்களாக இருக்கின்றனர். அதில் இருவர் தான் கோபி மற்றும் சுதாகர்.

“எனக்கும் அவனுக்கும்தான் போட்டியே” -களத்தில் இறங்கிய கோபி-சுதாகர்: பரிதாபங்கள் தயாரிப்பில் உருவாகும் படம்

ஆரம்பத்தில் Temple Monkeys என்ற சேனல் மூலமாக இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இவர், ஒவ்வொரு வீடியோவுக்கு பல ஆயிரம் லைக்குகள் வாங்கி கொண்டிருந்தனர். நாளடைவில் இவர்களுக்கு என தனி ரசிகர்கள் வர தொடங்கவே, 'மெட்ராஸ் சென்ட்ரல்', 'பரிதாபங்கள்' என்று புதிய Youtube சேனல்களை உருவாக்கினர்.

அதன்பிறகு இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் குவிய தொடங்கினர். அதோடு இவர்கள் போடும் ஒரு வீடியோ சில மணி நேரங்களில் லட்சக்கணக்கில் வியூஸ் பெற தொடங்கியது. ஒரு ஒரு கன்டென்டையும் எடுத்து ஒவ்வொரு வீடியோ செய்து வருகின்றனர். சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ, அரசியல் என இவர்கள் எடுக்காத கன்டென்டே இல்லை.

“எனக்கும் அவனுக்கும்தான் போட்டியே” -களத்தில் இறங்கிய கோபி-சுதாகர்: பரிதாபங்கள் தயாரிப்பில் உருவாகும் படம்

அரசியலிலும் குறிப்பாக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, தமிழிசை என அனைத்து முக்கிய பாஜக தலைவர்கள், பாஜக அரசு கொண்டு வந்த ஸ்கீம்ஸ் என கலாய்த்து வீடியோ வெளியிடுவர். இவை அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்கவே இவர்கள் என சொன்னாலும் அது வைரலாகி வரத்தொடங்கியது.

“எனக்கும் அவனுக்கும்தான் போட்டியே” -களத்தில் இறங்கிய கோபி-சுதாகர்: பரிதாபங்கள் தயாரிப்பில் உருவாகும் படம்

அதில் ஒன்று தான் "உருட்டு.. உருட்டு..", "கம்பி கட்டுர கதையெல்லாம் சொல்றான் பாரு.." என அடுக்கிக்கொண்டே போகலாம். அண்மையில் கூட "அவனுக்கும் எனக்கும் தான் போட்டியே.." என்ற டயலாக் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இப்படி கோபி - சுதாகர் எதை செய்தலும் ட்ரெண்டாகி வரும் நிலையில், இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விரைவில் படம் பண்ண போவதாக அறிவித்தனர். இருப்பினும் அதுகுறித்து எந்த அப்டேட்டும் வரவில்லை.

“எனக்கும் அவனுக்கும்தான் போட்டியே” -களத்தில் இறங்கிய கோபி-சுதாகர்: பரிதாபங்கள் தயாரிப்பில் உருவாகும் படம்

இந்த நிலையில் தற்போது இவர்களது படங்கள் குறித்து சூப்பரான அப்டேட் வந்துள்ளது. அதாவது பெயரிடப்படாத இவர்களது படத்திற்கு இன்று பூஜை தொடங்கியுள்ளது. சென்னை, சாலிகிராமத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இந்த படமானது க்ரவுட் பண்டிங் மூலமாக பரிதாபங்கள் ப்ரோடக்ஷன் லிமிடெட் தயாரிக்கவுள்ளது. கோபி - சுதாகர் நடிக்கவுள்ள இந்த படத்தை விஷ்ணு விஜயன் என்பவர் இயக்குகிறார்.

“எனக்கும் அவனுக்கும்தான் போட்டியே” -களத்தில் இறங்கிய கோபி-சுதாகர்: பரிதாபங்கள் தயாரிப்பில் உருவாகும் படம்

முன்னதாக இவர்கள் அவ்வப்போது பிற நடிகர்களுடன் சேர்ந்து சைட் ரோல் செய்த படங்கள் வந்தாலும், இவர்கள் இருவரும் மெயின் ரோலாக நடிக்கவிருக்கும் படம் இதுவே முதல்முறை. எனவே இவர்களை பெரிய திரையில் (திரையரங்கில்) காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories