சினிமா

“சீன்ஸ் இல்லைனாலும் நா இதுக்காகத்தான் நடிச்சேன்” - வாரிசு படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா Open Talk !

வாரிசு படத்தில் தனக்கு காட்சிகள் கொஞ்சம் இருந்தபோதிலும், தான் விஜய்க்காக நடித்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்துள்ளார்.

“சீன்ஸ் இல்லைனாலும் நா இதுக்காகத்தான் நடிச்சேன்” - வாரிசு படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா Open Talk !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் 'வாரிசு'. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெய சுதா, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 11-ம் தேதி இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. அஜித்தின் துணிவும், விஜயின் வாரிசும் நேருக்கு நேர் திரையில் மோதியது. முதல் நாள் வசூலில் துணிவு தூக்கினாலும், தற்போதைய நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியான தகவலின்படி 'வாரிசு' படம் வசூலில் ரூ.210 கோடி ரூபாயை கடந்து வசூல் வேட்டை செய்து வருகிறது.

“சீன்ஸ் இல்லைனாலும் நா இதுக்காகத்தான் நடிச்சேன்” - வாரிசு படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா Open Talk !

விமர்சன ரீதியாக திரை ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு வரவேற்பை பெறவில்லை என்றாலும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படத்தில் கதாநாயகியாக இடம்பெற்றிருக்கும் ராஷ்மிகாவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் தான் குவிந்து வருகிறது.

“சீன்ஸ் இல்லைனாலும் நா இதுக்காகத்தான் நடிச்சேன்” - வாரிசு படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா Open Talk !

ஏனெனில், பல சீன்களுக்கு இவர் தேவையில்லை என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதோடு இவர் வரும் சீன்கள் படத்திற்கு எந்த விதத்திலும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“சீன்ஸ் இல்லைனாலும் நா இதுக்காகத்தான் நடிச்சேன்” - வாரிசு படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா Open Talk !

இந்த நிலையில் தான் வாரிசு படத்தில் நடித்ததற்றகான காரணம் குறித்து நடிகை ராஷ்மிகா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஒரு படத்தில் நடிப்பது அவரவர் சொந்த விருப்பம் என்று நினைக்கிறேன். எனக்கு இந்தப் படத்தில் இரண்டு பாடல் காட்சிகள் இருப்பதாக எனக்குத் தெரியும். அந்த இரண்டு பாடல்களிலும் சரியாக கவனம் ஈர்க்க வேண்டியிருந்தது. இது உண்மையில் ஒரு காமெடியாக இருந்தது.

“சீன்ஸ் இல்லைனாலும் நா இதுக்காகத்தான் நடிச்சேன்” - வாரிசு படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா Open Talk !

இது குறித்து நான் விஜய் சாரிடம் சென்று ‘இரண்டு பாடல்களைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை’ என்று அடிக்கடி கூறுவேன். இது மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவு. ஆனாலும் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டது, நடிகர் விஜய்க்காகத்தான். எனக்கு விஜயுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. எனவே அவருடன் நடிக்க வேண்டும் என்பதால் ஒப்புக்கொண்டேன்.

“சீன்ஸ் இல்லைனாலும் நா இதுக்காகத்தான் நடிச்சேன்” - வாரிசு படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா Open Talk !

என்னைப் பொறுத்தவரை, ஒரு நடிகராக, செட்டிற்குச் சென்று உடன் பணிபுரியும் நபர்களிடமிருந்து சிறிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நடிகையாக, எல்லா வகையான பாத்திரங்களிலும் கமர்சியல் படங்களில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்த வகையில் இது சரிதான். ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்பவில்லை” என்றார்.

banner

Related Stories

Related Stories