சினிமா

“நொறுங்கிய 30 எலும்புகள்..” - விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் நடிகரின் தற்போதைய நிலை என்ன ?

அவெஞ்சேர்ஸ் படத்தில் ஹாக் ஐ கதாபாத்திரத்தில் நடித்த நடிகருக்கு ஏற்பட்ட விபத்தில் அவரது 30-க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்திருப்பதாக அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“நொறுங்கிய 30 எலும்புகள்..” - விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் நடிகரின் தற்போதைய நிலை என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கும் நிறுவனங்கள் தான் மார்வெல் மற்றும் டிசி. இவர்கள் தான் உலகில் இருக்கும் ஒட்டுமொத்த சூப்பர் மேன் முதல் ஸ்பைடர் மேன் வரை அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கியது.

காமிக்ஸ் கதாபாத்திரமாக புத்தகத்தில் மட்டுமே இருந்த இவர்களுக்கு உயிர் கொடுத்தது என்றால் அது இந்த இரண்டு பிரபல நிறுவனங்கள் தான். அதிலும் அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், ஹல்க் என பல கதாபாத்திரங்களின் உரிமையை மார்வெல் வாங்கியுள்ளது.

“நொறுங்கிய 30 எலும்புகள்..” - விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் நடிகரின் தற்போதைய நிலை என்ன ?

மார்வெல் யுனிவெர்சில் பல கதாபாத்திரங்கள் இருப்பினும், அவர்கள் அனைவருக்கு ஏதேனும் ஒரு சிறப்பு சக்தி இருக்கும். ஆனால் அவை ஏதும் இல்லாமல், இருக்கும் கதாபாத்திரங்கள்தான் ஹாக்கை மற்றும் ப்ளாக் விடோ (நட்டாஷா). மார்வெல் படங்களிலே 'தோர்' படத்தில் அறிமுகமான கதாபாத்திரம்தான் 'ஹாக்ஐ'. இதையடுத்து வந்து அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தில் இருந்து அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வரை இருக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றுதான் ஹாக்ஐ.

“நொறுங்கிய 30 எலும்புகள்..” - விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் நடிகரின் தற்போதைய நிலை என்ன ?

இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர். முன்னதாக பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தின் மூலமே உலகளவில் இவர் அறியப்பட்டார். தொடர்ந்து அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு பிறகு, இந்த கதாபாத்திரத்திற்கு என்றே 'HAWKEYE' என்று தனி சீரிஸ் வந்தது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

“நொறுங்கிய 30 எலும்புகள்..” - விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் நடிகரின் தற்போதைய நிலை என்ன ?

இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி அமெரிக்காவிலுள்ள ரோஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு ஜெர்மி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக காருடன் சேர்ந்து விபத்தில் சிக்கினார்.

“நொறுங்கிய 30 எலும்புகள்..” - விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் நடிகரின் தற்போதைய நிலை என்ன ?

இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து மீட்பு படையினருக்கு அளித்த தகவலின்பேரில், விரைந்து வந்த அவர்கள் இவரை மீட்டனர். மேலும் அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து உயிருக்கே ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

“நொறுங்கிய 30 எலும்புகள்..” - விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் நடிகரின் தற்போதைய நிலை என்ன ?

இதையடுத்து ரசிகர்கள் பலரும் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் சீராக உள்ளதாகவும், உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு "உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.. நான் உங்கள் அனைவருக்கும் அன்பை அனுப்புகிறேன்." என்று ஜெர்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

“நொறுங்கிய 30 எலும்புகள்..” - விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் நடிகரின் தற்போதைய நிலை என்ன ?

இந்த நிலையில் நேற்று தனது உடலில் உள்ள 30-க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்திருப்பதாக ஜெர்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட அந்த பதிவில், "அதிகாலை உடற்பயிற்சி, புத்தாண்டு தீர்மானங்கள் என அனைத்தும் இந்த புத்தாண்டில் மாறிவிட்டன.. என்னுடைய முழு குடும்பத்திற்கு சோகத்தை உண்டாக்கிய இந்த மோசமான சம்பவத்தில் இருந்து நான் விடுபட்டு இருக்கிறேன். செயல்படக்கூடிய அன்பை ஒருங்கிணைப்பதில் என்னுடைய கவனத்தை விரைவாக செலுத்துகிறேன்.

எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் நீங்கள் அனுப்பிய மெசெஜ்களுக்கு உங்களுக்கு என்னுடைய நன்றி.. உங்களுக்கு என்னுடைய அன்பும் பாராட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடனான அன்பும் பிணைப்பும் ஆழமடைவதை போலவே, இந்த 30-க்கும் மேற்பட்ட உடைந்த எலும்புகள் சரியாகி வலுவடையும். உங்கள் அனைவருக்கும் அன்பும் ஆசிகளும் உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories