சினிமா

1200 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்.. இந்திய சினிமா உலகம் அதிர்ச்சி!

பழம்பெரும் நடிகர் சலபதி ராவ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78.

1200 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்.. இந்திய சினிமா உலகம் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலம் பலிப்பரூரைச் சேர்ந்தவர் சலபதி ராவ். இவர் 1966ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனால் இந்திய சினிமாவிலேயே பிரபலமான ஒரு நடிகராகவும் சலபதி ராவ் இருந்துவந்தார். தனது வயது மூப்பின் காரணமாக படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். அவர் நடிகராக மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வெளியிட்டு வந்துள்ளார்.

மேலும் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரண நடிகராகவும் சலபதி ராவ் உள்ளார். ராவ் சாக்ஷி (1966), டிரைவர் ராமுடு (1979), வஜ்ரம் (1995), மற்றும் பாலிவுட் திரைப்படமான கிக் (2009) உட்பட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

அதோடு கலியுக கிருஷ்ணுடு, கடப்பா ரெட்டம்மா, ஜகந்நாடகம், பெல்லண்டே நூரெல்லா பந்தா, ஜனாதிபதி அல்லுடு போன்ற படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், ரவி பாபு என்ற மகனும் உள்ளனர். இவரும் தெலுங்கு சினிமாவில் நடிகராக உள்ளார்.

1200 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்.. இந்திய சினிமா உலகம் அதிர்ச்சி!

இந்நிலையில், பழம்பெரும் நடிகர் சலபதி ராவ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவு செய்தியை அடுத்து சலபதி ராவ்-க்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சமூகவளைதலத்தில் அவர் நடித்த படங்களின் வீடியோக்களை வெளியிட்டு அரசு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories