சினிமா

'மாமன்னன்' -கையில் வாளுடன் தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலின்.. வீடியோ வெளியிட்டு வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான் !

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உதயநிதி ஸ்டாலினுக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

'மாமன்னன்' -கையில் வாளுடன் தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலின்.. வீடியோ வெளியிட்டு வாழ்த்திய  ஏ.ஆர்.ரகுமான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2011ஆம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார். தன் முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி சேலத்தில் உதயநிதி நற்பணி மன்றம் தொடங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலின் மாறினார். சினிமாவைத் தவிர அரசியலிலும் காலடி எடுத்து வாய்த்த உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

'மாமன்னன்' -கையில் வாளுடன் தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலின்.. வீடியோ வெளியிட்டு வாழ்த்திய  ஏ.ஆர்.ரகுமான் !

கட்சியின் தொண்டர்களிடையேயும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகிய நிலையில், அவர் திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் அவர் செய்த பிரச்சாரம் திமுகவின் வெற்றிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.

அதன்பின்னர் சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்த அவர் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார்.

இந்த நிலையில், தற்போது தற்போது தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உதயநிதி ஸ்டாலினுக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் உதயநிதியின் அடுத்த படமான மாமன்னன் படத்திலிருந்து சில காட்சிகளை ஏ.ஆர்.ரகுமான்அதில் வெளியிட்டுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலின் கையில் தீப்பந்தத்துடன் நின்றுகொண்டிருக்ககும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories