சினிமா

சின்னத்திரை கணவர்-மனைவி பஞ்சாயத்து.. கர்ப்பிணியை தள்ளிவிட்டாரா நடிகர் ? -நடந்தது என்ன ?

திவ்யாவுக்கு முதல் கணவர் மூலம் குழந்தை பிறந்ததே தெரியாது என்று அவரது கணவர் ஆர்னவ் கூறியுள்ளார்.

சின்னத்திரை கணவர்-மனைவி பஞ்சாயத்து.. கர்ப்பிணியை தள்ளிவிட்டாரா நடிகர் ? -நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சன் டிவியில் ஒளிபரப்பான 'கேளடி கண்மணி' என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் திவ்யா. தற்போது இவர் செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா தொடரின் நாயகன் சித்து என்கிற ஆர்னவ்வுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இதில் திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளங்கள் மூலம் திவ்யா அறிவித்திருந்தார். நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரை கணவர்-மனைவி பஞ்சாயத்து.. கர்ப்பிணியை தள்ளிவிட்டாரா நடிகர் ? -நடந்தது என்ன ?

தனது கணவர் அர்னவ் தன்னைத் தாக்கியதாக திவ்யா போலீஸில் புகார் கொடுத்து தற்போது மருத்துவமனைல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த புகாரில் கணவர் தன்னை எட்டி உதைத்ததாகவும், தன் உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ்தான் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு நடிகர் அர்னவ் விளக்கமளித்துள்ளார். அதில், சம்பவம் நடந்ததாக திவ்யா புகார் அளித்தபோது தான் அந்த இடத்திலேயே இல்லை என்றும் குழந்தையை கலைக்க திவ்யா முடிவுசெய்திருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சின்னத்திரை கணவர்-மனைவி பஞ்சாயத்து.. கர்ப்பிணியை தள்ளிவிட்டாரா நடிகர் ? -நடந்தது என்ன ?

மேலும், திவ்யாவுக்கு முதல் கணவர் மூலம் குழந்தை பிறந்ததே தெரியாது என்றும், குழந்தையை வீட்டுக்கு கொண்டு வரும்போது அது அக்காவின் குழந்தை என்று கூறியதாகவும் கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டி சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories