சினிமா

"இதுக்கு அர்த்தம் எனக்கு இப்போ வரை தெரியாது" - நா.முத்துக்குமார் வரிகளை குறிப்பிட்டு ஹாரிஸ் ஜெயராஜ் பதிவு

விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' திரைப்படத்தில் இடப்பெற்ற பாடலின் வரிகளுக்கு 'தனக்கு இது நாள் வரை அர்த்தம் தெரியாது' என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

"இதுக்கு அர்த்தம் எனக்கு இப்போ வரை தெரியாது" - நா.முத்துக்குமார் வரிகளை குறிப்பிட்டு ஹாரிஸ் ஜெயராஜ் பதிவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்து 2003-ம் ஆண்டு வெளியான படம் தான் 'சாமி'. நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் இடம்பெற்றிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படமும் பாடலும் அப்போது திரை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பங்ளையே கவர்ந்து ஒரு குடும்ப படமாக இருந்தது. படத்தில் இடம்பெறும் விவேக்கின் காமெடி வழக்கமாக பொது கருத்து தெரிவிக்கும் வகையிலும், அந்நாள் முதல் இந்நாள் வரை பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.

"இதுக்கு அர்த்தம் எனக்கு இப்போ வரை தெரியாது" - நா.முத்துக்குமார் வரிகளை குறிப்பிட்டு ஹாரிஸ் ஜெயராஜ் பதிவு

மேலும் இப்படத்தில் இடப்பெற்ற "ஒரு சாமி, 2 சாமி... 6 சாமி.." என்ற வசனமும், "நா போலீஸ் இல்ல.. பொறுக்கி.." என்ற வசனமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுக்க திருநெல்வேலி பகுதியில் முக்கியமாக விளங்கும், ஜங்சன், அல்வா கடை, இரயில் நிலையம், பேருந்து நிலையம், காவல்நிலையம், ஜெயில், தாமிரபரணி நதி என ஒட்டுமொத்த பகுதிகளிலும் எடுக்கப்பட்டது.

மேலும் இப்படத்தில் இடப்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் மேஹா ஹிட் அடித்தன. அதில் விக்ரமின் இந்த படத்தில் அறிமுக பாடலான "திருநெல்வேலி அல்வா டா.." என்ற பாடல் ஒட்டுமொத்த திருநெல்வேலியின் சிறப்பம்சங்களை குறிக்கும். இந்த பாடல் வரிகள் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வரிகளில் எழுதப்பட்டது. இந்த பாடலுக்காக நா.முத்துக்குமார் சுமார் 2 நாட்களுக்கு மேலாக திருநெல்வேலியில் தங்கியிருந்து இங்கிருந்த முக்கிய விஷயங்களை அறிந்து எழுதியுள்ளார்.

"இதுக்கு அர்த்தம் எனக்கு இப்போ வரை தெரியாது" - நா.முத்துக்குமார் வரிகளை குறிப்பிட்டு ஹாரிஸ் ஜெயராஜ் பதிவு

இந்த நிலையில் இந்த பாடலில் இடம்பெறும் "பாளையங்..கோட்டையில்.. ஜெயிலு பக்கம் இரயிலு கூவும்..." என்ற வரிகளை ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்து, அது தொடர்பான வீடியோவையும் பதிவிட்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு டேக் செய்துள்ளார்.

"இதுக்கு அர்த்தம் எனக்கு இப்போ வரை தெரியாது" - நா.முத்துக்குமார் வரிகளை குறிப்பிட்டு ஹாரிஸ் ஜெயராஜ் பதிவு

இதனை கண்ட ஹாரிஸ் ஜெயராஜ் அவருக்கு திருப்பி பதிலளித்துள்ளார். அதில் "தனக்கு இதுநாள் வரை இதற்கு அர்த்தம் தெரியாது. நன்றி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories