சினிமா

ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட 'பிரேமம்' பட இயக்குநர்.. காரணம் என்ன ?

'பிரேமம்' படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு ரிலீஸ் செய்யாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு கொள்வதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட 'பிரேமம்' பட இயக்குநர்.. காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

'நேரம்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். அவரின் அந்த திரைப்படம் பரவலாக வரவேற்ப்பை பெற்றது. ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய 'பிரேமம்' என்ற படம் இந்திய அளவில் வெற்றிபெற்றது.

அதிலும் தமிழ்நாட்டில் இந்த படம் கல்லூரி மாணவர்களின் பெரும் அபிமானத்தை பெற்று மாபெரும் ஹிட் ஆனது. குறிப்பாக சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.

ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட 'பிரேமம்' பட இயக்குநர்.. காரணம் என்ன ?

இந்த திரைப்படத்துக்கு பின்னர் பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அல்போன்ஸ் புத்திரன் 5 ஆண்டுகளாக அடுத்த படம் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதன்பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார்.

ஆனால் அதற்கு முன்னரே பிருத்விராஜ், நயன்தாரா நடிக்கும் கோல்ட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். செப்டம்பர் 8 ஆம் தேதி ஓனம் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியாத காரணத்தால் அது வெளியாகவில்லை.

ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட 'பிரேமம்' பட இயக்குநர்.. காரணம் என்ன ?

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு ரிலீஸ் செய்யாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு கொள்வதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பின்னூட்டமாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories