சினிமா

கணிதத்தை வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.. ரசிகர்களை கவர்ந்தாரா கோப்ரா விக்ரம் !

முழுக்க முழுக்க கணிதத்தை நம்பி திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் அஜய் ஞானமுத்து.

கணிதத்தை வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.. ரசிகர்களை கவர்ந்தாரா கோப்ரா விக்ரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது ‘கோப்ரா’. கணக்கு வாத்தியார் சொல்லித்தரும் கணக்கு ரசிகர்களுக்குப் புரிந்ததா? ‘கோப்ரா’ படம் எப்படியிருக்கிறது? பார்க்கலாம்!

உலகமெங்கும் இருக்கும் முக்கியப் புள்ளிகள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகளைச் செய்த அசாசின் யாரென்பதைக் கண்டுப்பிடிக்க வரும் இண்டர்போல் அதிகாரி இர்ஃபான் பதான். இந்தக்கொலைகள் கணிதம் அடிப்படையில் செய்யப்படுவதாகவும், அவரொரு தமிழன் எனவும் விசாரணையில் தெரிகிறது. இன்னொரு பக்கம் சாதாரண கணக்கு வாத்தியாராக வாழ்கிறார் விக்ரம். இவர் தான் போலீஸ் தேடும் கோப்ராவா, கொலைகளுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார், இறுதியில் போலீஸ் கண்டுப்பிடித்ததா என்பதே ‘கோப்ரா’ படத்தின் ஒன்லைன்.

கணிதத்தை வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.. ரசிகர்களை கவர்ந்தாரா கோப்ரா விக்ரம் !

மூன்று வருடங்களுக்குப் பிறகு, திரையரங்கில் விக்ரமிற்கு வெளியாகியிருக்கும் படமிது. இடையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மஹான் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் விக்ரமின் படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு, ‘டிமாண்டி காலணி’, ‘இமைக்கா நொடிகள்’ என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த அஜய்ஞானமுத்து இயக்கியிருப்பதால் கூடுதல் கவனம் பெற்றது ‘கோப்ரா’. அதன்படி, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

கணக்கு வாத்தியாராக சாதுவாகவும், கணிதவியல் அறிவுடன் ஹீரோயிசம் காட்டுமிடமாகட்டும் என இரண்டு விதமாக வெரைட்டி காட்டியிருக்கிறார் விக்ரம். எக்கச்சக்க வேடங்களில் தோன்றும் காட்சிகளில் மிரட்டுகிறார் விக்ரம். நிறைய இடங்களில் விக்ரமாக தெரியாமல், கேரக்டராக மட்டும் தெரிவது தான், விக்ரமின் அனுபவ நடிப்பு. விக்ரமை கோப்ராவாக உருவகப்படுத்தும் இடங்கள் வேறலெவல். விக்ரமின் பின் கதை, காதல், ஹாலூசினேஷன் காட்சிகள் என நடிப்புக்கு நிறைய ஸ்கோப் உள்ள படம். அசால்டாக அசத்தியிருக்கிறார் விக்ரம்.

கணிதத்தை வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.. ரசிகர்களை கவர்ந்தாரா கோப்ரா விக்ரம் !

படத்தில் மூன்று நாயகிகள். மிருணாளினி, மீனாட்சி மற்றும் கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி என மூவருமே கேரக்டரில் கச்சிதம். கணிதவியல் மாணவியாக படம் முழுக்க வரும் மீனாட்சியின் ரோல் சிறப்பு. கிரிக்கெட்டில் சதமடித்து விளாசும் இர்ஃபான் பதான், நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். வில்லனாக உடல்மொழியிலும், வசனத்திலும் என தனித்து தெரிகிறார் மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ.

மியா ஜார்ஜ், ரோபோ சங்கர், ஜான்விஜய், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ் என படத்தின் அனைத்து கேரக்டருமே கச்சிதம்.

முழுக்க முழுக்க கணிதத்தை நம்பி திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் அஜய் ஞானமுத்து. அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை. கணக்கு ஃபார்முலாவை சொல்லும் இடமாகட்டும், கணிதவியல் முறையில் செய்யப்படும் க்ரைம் என காட்சிகள் புதுமையாக இருக்கிறது. மூன்று மணிநேர படமென்றாலும், முதல் பாதி பரபர வேகத்திலும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் நிதானமாக செண்டிமெண்டுடன் ஆக்‌ஷன் கலந்து என ‘கோப்ரா’ நல்ல ஒரு மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கிறது.

பாடல்களில் ஏற்கெனவே கவனம் ஈர்த்துவிட்டது போல, படத்தின் பின்னணி இசையிலும் பெஸ்ட் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். குறிப்பாக, தும்பி பாடல் க்ளாஸ்.

கணிதத்தை வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.. ரசிகர்களை கவர்ந்தாரா கோப்ரா விக்ரம் !

நாடு நாடாக கதை நகர்வதால் டெக்னிக்கலாகவும் படம் மிரட்டியிருக்கிறது. பிரம்மிக்க வைக்கும் ஒளிப்பதிவு, படத்துக்கு ஏற்ற எடிட்டிங், எக்கச்சக்க விஎபெக்ஸ் ஒர்க் என அனைத்துமே மாஸ்.

இன்றைய காலக்கட்டத்தில் ஆடியன்ஸ் எதிர்பார்ப்பு மாறிவிட்டது. வழக்கமான ஒரு மாஸ் ஹீரோயிஸ சினிமாவை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. ஜீனியஸான ஒரு கதையை விரும்புகிறார்கள். அப்படியான, புத்திசாலித்தமான திரைக்கதை, கூடவே படத்துக்கு ஏற்ற செண்டிமெண்ட் , ஆக்‌ஷன், டிராமா என ‘கோப்ரா’ படக்குழு குழு போட்ட கணக்கு தப்பவில்லை.

banner

Related Stories

Related Stories