சினிமா

OTT-யில் வெளிவரும் முன்பே YOUTUBE-ல் வெளிவந்த விருமன் திரைப்படம் .. தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி !

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படம் YOUTUBE-இல் வெளிவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

OTT-யில் வெளிவரும் முன்பே YOUTUBE-ல் வெளிவந்த விருமன் திரைப்படம் .. தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடிகர் சூர்யா தயாரிப்பில் அவர் தம்பி கார்த்தி, இயக்குநர் சங்கர் மகள் அதிதி நடித்த விருமன் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்ததால் தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த படத்தின் வெற்றி விழாவை சமீபத்தில் விருமன் பட குழுவினர் கொண்டாடினர். இந்த விழாவில் இயக்குநர் முத்தையா உள்ளிட்ட படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் என்கிற முறையில் நடிகர் சூர்யா பிரேஸ்லெட் உள்ளிட்ட பரிசு பொருட்களை கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

OTT-யில் வெளிவரும் முன்பே YOUTUBE-ல் வெளிவந்த விருமன் திரைப்படம் .. தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி !

இந்த நிலையில், இந்த படம் OTT தளத்தில் வெளிவரும் முன்பே தற்போது YOUTUBE இல் வெளிவந்துள்ளது. ஜி புக் என்கிற YOUTUBE சேனல் HD தரத்தில் இந்த படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த படத்தின் கமெண்ட் பகுதியில், இதே போல் பல படங்களை வெளியிட வேண்டும் என்று சிலர் கூற கட்டாயமாக வெளியிடுவோம் என்று அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

இது குறித்து பட தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் பறந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் YOUTUBE நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், YOUTUBE- இல் இருந்து விருமன் படம் நீக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories