சினிமா

"காமெடியன் சூரி என்பதே என் அடையாளம்.. இதுவரை என் சம்பளத்தை நான் நியமித்ததே இல்லை" -நடிகர் சூரி உருக்கம்!

'காமெடியன் சூரி' என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன் என்று நடிகர் சூரி உருக்கமாக பேசியுள்ளார்.

"காமெடியன் சூரி என்பதே என் அடையாளம்.. இதுவரை என் சம்பளத்தை நான் நியமித்ததே இல்லை" -நடிகர் சூரி உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாக கொடி ஏற்றினார்.

இதையடுத்து செய்தியாளரை சந்தித்த சூரி, விழவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் விருமன் திரைப்படம் குறித்து, "தனக்கும், தன் குடும்பத்தாருக்குமே 'விருமன்' படத்திற்கு டிக்கெட் இல்லை. அந்த அளவிற்கு அமோக வெற்றி படத்திற்கு கிடைத்திருக்கிறது." என்றார்.

"காமெடியன் சூரி என்பதே என் அடையாளம்.. இதுவரை என் சம்பளத்தை நான் நியமித்ததே இல்லை" -நடிகர் சூரி உருக்கம்!

மேலும் பேசிய அவர், "முதன்முதலில் 'விடுதலை' படத்தின் கதையை என்னிடம் இயக்குநர் வெற்றிமாறன் சொன்னதும், எந்த கேரக்டரில் நிறைய சீன்கள் உள்ளன, எந்த கேரக்டர் நன்றாக இருக்கிறது என ஒவ்வொரு கேரக்டராக என் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்கையில், நீங்க தான் மெயின் லீட் என்று கூறி அதிர்ச்சிபடுத்தினார்." என்று தெரிவித்தார்.

"காமெடியன் சூரி என்பதே என் அடையாளம்.. இதுவரை என் சம்பளத்தை நான் நியமித்ததே இல்லை" -நடிகர் சூரி உருக்கம்!

அதோடு, "காமெடியனாக இருந்து சொல்ல வேண்டிய கருத்துக்கள் எவ்வளவோ இருக்கிறது. என்னதான் நான் மெயின் கேரக்டரில் நடித்தாலும், அதையும் நான் ஹீரோவாக பார்க்கவில்லை. படத்தின் ஒரு கேரக்டராகவே பார்க்கிறேன். நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்கு என்னுடன் பயணித்த அத்தனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தான் காரணம்." என்றார்.

"காமெடியன் சூரி என்பதே என் அடையாளம்.. இதுவரை என் சம்பளத்தை நான் நியமித்ததே இல்லை" -நடிகர் சூரி உருக்கம்!
Silverscreen Inc.

மேலும், "'காமெடியன் சூரி' என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன். அதேபோல் எனது கேரக்டர் இப்படி மாறிவிட்டது நான் இத்தனை பேருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன் என சம்பளத்திலும் நான் எப்போதும் தீர்மானம் செய்ய மாட்டேன்.

அவர்கள் பார்த்து எனக்கு இப்போது வரை என்ன நியமித்தார்களோ என்ன கொடுக்கிறார்களோ அதைக் கொண்டுதான் என்னுடைய வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories