சினிமா

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து.. இரத்தம் வழிய மருத்துவமனைக்கு கொண்டு போன 'கோமாளி' பட நடிகை..

நடிகை சம்யுக்தா ஹெக்டே படப்பிடிப்பின்போது கீழே விழுந்ததால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து.. இரத்தம் வழிய மருத்துவமனைக்கு கொண்டு போன 'கோமாளி' பட நடிகை..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் தான் 'கோமாளி'. இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தில் ஜெயம்ரவியின் முன்னாள் காதலியாக நடித்தவர் தான் சம்யுக்தா ஹெக்டே.

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து.. இரத்தம் வழிய மருத்துவமனைக்கு கொண்டு போன 'கோமாளி' பட நடிகை..

கோமாளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமடைந்த இவர், அதன்பின் வெளியான 'பப்பி','தேள்', 'மன்மத லீலை' படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து கன்னட திரைப்படங்களில் பிசியாக இருக்கும் இவர், தற்போது ராணா, கிரீம் என்ற படங்களில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து.. இரத்தம் வழிய மருத்துவமனைக்கு கொண்டு போன 'கோமாளி' பட நடிகை..

இந்த நிலையில், கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான அபிஷேக் பசந்த்துக்கு ஜோடியாக 'கிரீம்' என்ற படத்தில் நடித்து வரும் இவர், சண்டைக் காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கும்போது திடீரெனக் கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து.. இரத்தம் வழிய மருத்துவமனைக்கு கொண்டு போன 'கோமாளி' பட நடிகை..

இதையடுத்து கீழே விழுந்த அவரை படக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நன்றாக ஓய்வு எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலையடுத்து அவருக்கு விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories