சினிமா

குழந்தைகளை மகிழ்வித்தாரா 'மை டியர் பூதம்' பிரபுதேவா?.. திரை விமர்சனம்!

அலாவுதீன் கதை நம்மை சளிப்படைய செய்ததில்லை, என்றும் சளிக்கவைக்கப் போவதுமில்லை

குழந்தைகளை மகிழ்வித்தாரா  'மை டியர் பூதம்' பிரபுதேவா?.. திரை விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பொதுவாக தமிழ் சினிமாவில் குழந்தைக்கான படங்கள் வெளியாவது அறிது. ஏனென்றால் அவ்வாறு வெளிவரும் படங்களுக்கு Target Audience மிகவும் குறைவு தான், அதை மீறி வரும் படங்கள் குழந்தைகளை திருப்தி படுத்தவில்லை என்றால் அவ்வளவு தான் அந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என அந்த படத்தில் சம்மந்தப்பட்டிருக்கும் அனைவரும் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். இந்த காரணத்தினால் தான் குழந்தைக்கான fantasy படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. ஆனால் இந்த பயத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தில்லாக இறங்கியிருக்கிறது மை டியர் பூதம் படம்.

பிரபுதேவா, அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன் நடிப்பில் என் .ராகவன் இயக்கத்தில் அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம் மை டியர் பூதம். படத்தில் பூதமாக நடிகர் பிரபுதேவா நடித்துள்ளார்.

குழந்தைகளை மகிழ்வித்தாரா  'மை டியர் பூதம்' பிரபுதேவா?.. திரை விமர்சனம்!

மை டியர் பூதம் படத்தின் கதையை பற்றி பார்க்கலாம்:

வேற்று உலகத்தில் வாழும் பிரபுதேவாவிற்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவித்து வர, பிறகு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவாவின் மகன் தவமிருக்கும் ஒரு முனிவரை தவறுதலாக எழுப்பி விடுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த முனிவர் பிரபுதேவாவின் மகனுக்கு சாபம் விட போகிறார். இதை அறிந்த பிரபுதேவா முனிவரிடம் மன்றாடி அந்த சாபத்தை பிரபுதேவா வாங்கிக்கொண்டு கல்பொம்மையாக மாறி விடுகிறார். பின் அந்த பொம்மையிலிருந்து பூதத்தை சிறுவன் திருநாவுக்கரசு விடுவிக்கிறார். அந்த சிறுவனுக்கு தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக இருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர பிரபுதேவா விரும்புகிறார். ஆனால், அதற்கு அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும். அதை திருநாவுக்கரசு செய்தாரா? பிரபுதேவா தன் மகனுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதை கொஞ்சம் செண்டிமெண்டுடன் சொல்லியிருக்கிறது மை டியர் பூதம் படம்

குழந்தைகளை மகிழ்வித்தாரா  'மை டியர் பூதம்' பிரபுதேவா?.. திரை விமர்சனம்!

கோலிவுட்டின் மை டியர் பூதம் படத்தை தொடர்ந்து ஹாலிவுட்டில் அலாவுதீன் படத்தின் தொடர்ச்சியாக தற்போது அலாவுதீன் 2 படம் பெரிய பொருள் செலவில் தயாராகி வருகிறது. இந்த படம் வரும் 2025 ஆம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அலாவுதீன் கதைகளை தழுவி வரும் படங்கள் இத்தோடு முடியபோவதில்லை எதிர்க்காலத்தில் வந்துக்கொண்டு தான் இருக்கும் அதை நாமும் காணத்தான் போகிறோம். இந்த அலாவுதீன் கதை 17ஆம் நூற்றாண்டில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரைக்கும் பல்வேறு வடிவங்களில் நம் செவிகளை அடைந்திருந்தாலும் அலாவுதீன் கதை நம்மை சளிப்படைய செய்ததில்லை, என்றும் சளிக்கவைக்கப் போவதுமில்லை.

banner

Related Stories

Related Stories