வைரல்

1704 ஆண்டு முதல் இன்று வரை.. வரலாற்று பின்னணியில் அலாவுதீன் பூதங்களின் கதை!

ஹாலிவுட்டில் 1992 ஆம் ஆண்டு அனிமேஷன் வடிவில் வெளியான அலாவுதீன் படத்தை மையமாக வைத்து 2019 ஆம் கய் ரிட்சி (GUY RITCHIE) என்ற இயக்குனர் லைவ் ஆக்‌ஷன் படமாக உருவாகியிருந்தார்.

1704 ஆண்டு முதல் இன்று வரை.. 
 வரலாற்று பின்னணியில் அலாவுதீன் பூதங்களின் கதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இன்று நம் பொழுதுப்போக்காக ஸ்மாட் போன், சினிமா, ஓடிடி, சமுக வலைதளங்கள், வீடியோ கேம்ஸ் என பல இருந்தாலும் பொழுது போகவில்லை என்று தான் குறை கூறுகிறோம். ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் இல்லாத சமயத்தில், அதாவது சுமார் 50 வருடங்கள் முன்பு வரையில் நமக்கு முக்கிய பொழுதுப்போக்காக இருந்தது கதைகள் மட்டும் தான். புத்தகங்களின் வாயிலாக மட்டுமில்லாமல் வீட்டு பெரியோர்கள் கூரும் கதைகளைக் கேட்டு வளர்ந்தோம். கதைக் கேட்கும் வடிவங்கள் வேண்டுமானல் காலப்போக்கில் மாறி இருக்கலாம் ஆனால் கதைகளுக்கு நாம் கொடுத்த முக்கியதும் இன்றும் மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்... அதனால் தான் பல இதிகாச கதைகளை இன்று சினிமா மூலமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படி கதையாக உருவாகி புத்தகம், நாடகம், தொலைக்காட்சி தொடர், சினிமா என்று எல்லா பரிமாணத்திலும் நம்மை ஆச்சர்யப் படுத்திய அலாவுதீன் கதையை பற்றியும் அதை சுற்றி உருவான தொடர்கள் மற்றும் படங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.

அலாவுதீன் இது ஒரு மத்திய கிழக்கு நாடுகளின் நாட்டுப்புறக் கதைகளில் இருந்து 1704 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்ட One Thousand and One Nights

என்ற பெருங்கதையின் ஒரு கதை தான் இந்த அலாவுதீன். பின்பு 1721’ல் அரபியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிறகு 18ஆம் நூற்றாண்டு இறுதியில் தான் மற்ற மொழிகளில் வெளிவர ஆரம்பித்தது. தந்திரம், சாகசம், கற்பனை, நகைச்சுவை என பல உணர்வுகளைக் கொண்ட கதை என்பதால் உலகின் பல்வேறு பகுதிகளிள் உள்ள சிறுவர், சிறுமியர்களும், ஏன் பெரியவர்களும் ஆவலோடு படித்து மகிழக் கூடிய கதைகளில் ஒன்றாக கருதப்பட்டது.

1704 ஆண்டு முதல் இன்று வரை.. 
 வரலாற்று பின்னணியில் அலாவுதீன் பூதங்களின் கதை!

19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வெறும் கதையாக மட்டுமே அறியப்பட்ட அலாவுதீன் கதை முதன்முதலில் மேடை நாடகமாக தான் போடப்பட்டது. அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த இந்த நாடகத்துக்கு கிடைத்த வரவேற்பு தான் அலாவுதீன் கதையை திரையில் ஒளிரச் செய்ததது. அலாவுதீன் கதை புத்தகத்திலிருந்து திரைக்கு வருவதற்கு கிட்டத்தட்ட 204 ஆண்டுகள் தேவைப்பட்டது. 1917 ஆம் ஆண்டு Aladdin and the Wonderful Lamp என்ற பெயரில் ஊமைப் படமாக வெளிவந்தது. அலாவுதீனின் திரைப்பயணமும் அங்கிருந்து தான் தொடங்கியது.

பின்பு 1924’ல் லண்டனில் தி தீஃப் ஆஃப் பாக்தாத் (the thief of bagdad)என்ற பெயரில் வெளியானது. 1940 ஆம் ஆண்டு இதே பெயரில் ரிமெக் செய்யப்பட்டது.பாக்தாத் என்னும் நாட்டின் அரச அரண்மனைக்குள் திருடன் ஒருவன்திருட நுழைகிறான் அப்படி பதுங்கிச் செல்லும்போது, பாக்தாத் நாட்டின் இளவரசியை பார்க்க, பார்த்த உடனே காதல் மலர, திருடன் இளவரசனாக நடித்து இளவரசியை காதல் வையப்பட செய்கிறான். தான் இளவரசிக்கு செய்து வரும் துரோகத்தை அந்நாட்டின் புனித மனிதரிடம் அந்த திருடன் வெளிப்படுத்துகிறார், அவர் ஒரு மாயப்பெட்டியைக் கண்டுபிடிக்க அனுப்புகிறார். திருடனும் அந்த தவத்தை செய்து பல தடைகளைத் தாண்டி அந்த மாயப்பெட்டியை அடைகிறான், அதனுல் ஒரு மாய விளக்கு இருப்பதை பார்த்து குழும்பியவன் அதை எடுத்து பார்க்கும் போது தான் அதனுல் இருந்து பூதம் ஒன்று வந்ததை பார்த்து பயப்பட, வெளிவந்த பூதம் அவனை அலாவுதீன் எனும் பெயர் சொல்லி அழைத்து நான் உங்களின் அடிமை என கூற அங்கிருந்து கதையின் போக்கே மாறும். விளக்குடன் அலாவுதின் அரண்மனை திரும்பும் போது எதிரி நாட்டு மந்திரவாதி தனது படைபலத்தைக் கொண்டு இளவரசியை மயக்கி அடைய பார்கிறான். இதை அறிந்த அலாவுதீன் அந்த மாயப்பெட்டியில் உள்ளே இருந்த விளக்கை பயன்படுத்தி பாக்தாத்தையும், இளவரசியையும் எதிரிநாட்டு படையெடுப்பாளரிடமிருந்து காப்பாற்றி இளவரசியை மணக்கிறான். இது தான் தி தீஃப் ஒஃப் பாக்தாத் படத்தின் கதை.

அப்போது தான் உலக சினிமாவின் ஆரம்பக் காலம் என்பதால் இந்த அலாவுதீன் கதையை படமாக்கும் யோசனை உலகம் முழுக்க பரவ தொடங்கியது. இந்த யோசனை இந்திய சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. 1953 ஆம் பாலிவுட் இயக்குனர் கே. அமர்நாத் இயக்கத்தில் அலீஃப் லைலா (Alif Laila) என்ற பெயரில் அலாவுதீன் கதை திரைக்கு வந்தது. தி தீஃப் ஒஃப் பாக்தாத் படத்தின் கதையில் எந்த மாற்றங்கள் செய்யாமல் அப்போது இருந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிளாக் அண்ட் வைட் (black & white) படமாக வெளிவந்தது. ரசிகர்களுக்கு இந்த மாயாஜாலக் கதை புதிய அனுபவத்தை குடுத்தது மட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் புது மைல்கலாக அமைந்தது.

1704 ஆண்டு முதல் இன்று வரை.. 
 வரலாற்று பின்னணியில் அலாவுதீன் பூதங்களின் கதை!

இதை பார்த்த இயக்குனர் டி. ஆர். ரகுநாத் அலாவுதீன் கதையில் சிரிய மாற்றம் செய்து தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற படத்தை இயக்கியிருந்தார்.”அலாவுதீன் அற்புத தீபம்" என்ற பெயரில் தெலுங்கிலும், "அலாதின் கா சிராக்" என்ற பெயரில் இந்தியிலும் 1957 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்த படத்தில் நடிகர் நாகர்ஜுனாவின் தந்தையான அக்கினேனி நாகேஸ்வர ராவ் அலாவுதீனாகவும், அஞ்சலிதேவி இளவரசியாகவும் நடித்திருந்தார்கள்.

ஒரு மந்திரவாதி, ஒரு குகையில் இருக்கும் மந்திர விளக்கை எடுக்க முயல்கிறான். அலாவுதீன் மட்டுமே அந்த மாய விளக்கினை எடுக்கும் திறன் கொண்டவர் என்று அறிந்த அந்த மந்திரவாதி. அலாவுதீனின் சித்தப்பா போன்று வேடமிட்டு அவனை அந்த குகைக்கு அழைத்து செல்கிறான். ஆனால் அலாவுதீன் குகைக்கு செல்ல பயப்படுகிறான் அவனை உள்ளே அனுப்புவதற்காக தன்னுடைய மந்திர மோதிரத்தை அவனிடம் கொடுகிறார். அலாவுதீனும் அதை வாங்கிக்கொண்டு குகைக்கு சென்றபின், எதர்ச்சையாக அந்த மோதிரத்தை தேய்க்க ஒரு பூதம் வருகிறது. அந்த மந்திர விளக்கை அடைய அலாவுதீனுக்கு அந்த பூதம் உதவுகிறது. பின் அவன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூற வீட்டுக்கு அழைத்து செல்கிறது. அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்க்கும் போது, பூதம் வெளிப்பட்டு, அவர்களுக்குத் தேவையானவற்றைத் தருகிறது. அவர்கள் விரைவில் பெரும் பணக்காரர் ஆகி விட, அவன் வளர்ச்சியைப் பொறுக்காத மந்திரவாதி, ஒரு பணிப்பெண் மூலம், பழைய விளக்குக்கு புது விளக்கு தரும் விற்பனையாளராக அவன் வீடு சென்று, மந்திர விளக்கைக் திருடிவிட, அலாவுதீன் அந்த மோதிரத்தில் உள்ள பூதம் மூலம், விளக்கை மீண்டும் கண்டுப்பிடித்து .நாட்டின் இளவரசியை திருமணம் செய்துக்கொள்கிறான். இது தான் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தின் மையக்கதை.

சுமார் 22 வருடங்களுக்குப் பிறகு 1979 ஆம் ஆண்டில் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற பெயரில் அதே கதையை மறுபடியும் மலையாளப்பட இயக்குனர் ஐ.வி.சசி படமாக்கினார். இம்முறை அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் கலரில் உருவாக்கப்பட்டிருந்தது.

அலாவுதீனாக கமலும், கம்மாருதீன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும் நடித்தனர். விளக்கில் இருந்து வரும் பூதமாக நடிகர் அசோகன் நடிக்க, ஜெமினி கணேசன், வி.எஸ்.ராகவன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்தமுறை அலாவுதீன் கதையை சற்று மாற்றி அமைத்துருந்தார் ஐ.வி.சசி . முக்கியமாக படத்தில் வரும் ரஜினியின் கதாபாத்திரம் மூலக்கதையில் இல்லை. நடிகர் ரஜினிக்காந்த் அப்போது கொடுர வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த காலம் அது. அதனால் அலாவுதீனாக நடித்த கமலை எதிர்க்கும் வில்லனாக ரஜினியை பொறித்தியிருப்பார் இயக்குனர் சசி. கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் எல்லாம் இல்லாதக் காலக்கட்டத்தில் உருவான படம் என்பதால் அப்போது துறையில் இருந்த ஸ்பெஷலிஸ்டுகளின் உதவியுடன் மாய தந்திரக் காட்சிகளை பாடமாக்கினார்கள். அதுவரை தமிழ் சினிமா கணாத தந்திரக் காட்சிகளுடன் பெரிய பொருள் செலவில் படம் உருவானதால் சற்று கலக்கத்தில் இருந்த படக்குழுவிற்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெரியது.

1704 ஆண்டு முதல் இன்று வரை.. 
 வரலாற்று பின்னணியில் அலாவுதீன் பூதங்களின் கதை!

காலம் செல்ல செல்ல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வர, அலாவுதீன் கதையின் வடிவங்களும் மாறிக்கொண்டே வந்தது. 1992 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரிப்பில் அலாவுதீன் அனிமேஷன் படமாக வெளிவந்தது. ஊமை படத்தில் ஆரம்பித்து, பிளாக் அண்ட் வைட் (black & white), கலர் என பல பரிமாணங்களில் வெளிவந்த அலாவுதீன் படத்தை முதல்முறையாக அனிமேஷனில் பார்த்த ரசிகர்கள் அந்த படத்தைக் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். மேலும் இந்த அலாவுதீன் படம் சிறந்த ஒலித் தொகுப்பு மற்றும் சிறந்த ஒலிக்கான ஆஸ்கார் விருதையும் பெற்றுருந்தது.

ஹாலிவுட்டில் 1992 ஆம் ஆண்டு அனிமேஷன் வடிவில் வெளியான அலாவுதீன் படத்தை மையமாக வைத்து 2019 ஆம் கய் ரிட்சி (GUY RITCHIE) என்ற இயக்குனர் லைவ் ஆக்‌ஷன் படமாக உருவாகியிருந்தார்.

வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் நடிகர் வில் சிமித் (WILL SMITH) பூதமாக நடித்திருந்தார், நடிகர் மேனா மசூத் (mena massoud) அலாவுதீனாகவும் நவோமி ஸ்காட் (naomi scott) இளவரசியாகவும் நடித்திருந்தனர்.உலகமெங்கும் 3டி தொழில் நுட்பத்தில் வெளியான இந்த அலாவுதீன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

banner

Related Stories

Related Stories