சினிமா

கிரிக்கெட் விளையாடும் போது நடந்த விபரீதம்.. TV தொலைக்காட்சி தொடர் நடிகர் திடீர் மரணம்!

டி.வி தொலைக்காட்சி தொடர் நடிகர் தீபேஷ் பன் திடீரென மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாடும் போது நடந்த விபரீதம்.. TV தொலைக்காட்சி தொடர் நடிகர் திடீர் மரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான Bhabiji Ghar Par Hai மூலம் பிரபலமானவர் நடிகர் தீபேஷ்பன். இவர் சில இந்தி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகர் திபேஷ் பன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நடிகர் தீபேஷ்பன் மறைவை கேட்டு சக நடிகர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து அவருக்கு அஞ்சலி செலித்தி வருகின்றனர். நடிகர் தீபேஷ் பன்னுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இதையடுத்து நடிகர் தீபேஷ் பன் குடும்ப புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் விளையாடும் போது நடந்த விபரீதம்.. TV தொலைக்காட்சி தொடர் நடிகர் திடீர் மரணம்!

மறைந்த தீபேஷ் பன் நண்பரும், சக நடிகருமான சார்ருல் மாலிக், "என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நேற்று அவரை சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக ரீல் வீடியோக்கைள உருவாக்கினோம். தீபேஷ் பன்னை எட்டு வருடங்களான எனக்குத் தெரியும். ஒருவர் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல. நல்ல மனிதர். அவரை இழந்துவிட்டோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories