சினிமா

காணாமல் போன தலை.. அதை சுற்றி நகரும் புலனாய்வு கதை: OTT-யில் வெற்றி பெற்றதா விலங்கு படம்?

விலங்கு என்ற இணையத் தொடர் தமிழ் இணையத் தொடர்கள் பெறும் வரவேற்பைத் தொடங்கி வைத்திருக்கிறது.

காணாமல் போன தலை.. அதை சுற்றி நகரும் புலனாய்வு கதை: OTT-யில் வெற்றி பெற்றதா விலங்கு படம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Zee5 ஓடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இத்தொடரில் விமல், பாலா, முனிஸ்காந்த், இனியா போன்ற பலரும் நடித்திருக்கின்றனர்.

வேம்பூர் என்கிற ஊரின் காவல் நிலையத்தில் விமல் துணை ஆய்வாளராக பணிபுரிகிறார். அவருடைய அன்றாட அலுவல் பணிகளை காண்பிப்பதாக தொடர் தொடங்குகிறது. அவரின் மனைவி இனியா கர்ப்பிணியாக இருக்கிறார். வீட்டில் அவரை விட்டுவிட்டு காவல்நிலையத்துக்குக் கிளம்பிச் செல்கிறார். ஒரு காவல் நிலையச் சூழல் நமக்குள் மெல்ல normalize செய்யப்படுகிறது. ஒரு தொலைபேசி அழைப்பு. காட்டுக்குள் ஒரு பிணம் கிடப்பதாகத் தகவல். விமல் கிளம்பிச் செல்கிறார். அங்கு முகம் நைந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு ஒரு பிணம் கிடக்கிறது.

ஏற்கனவே காணாமல் போனதற்கு புகார் கொடுத்த அரசியல் புள்ளியை அழைத்து அடையாளம் காட்டச் சொல்கிறார். அவரின் அடையாளம் பிணத்தில் இல்லை என்கிறார் அரசியல் புள்ளியின் உறவினர். பதிவாகாத ஏதோவொரு குற்றம் என புரிகிறது. உயரதிகாரிக்கு விமல் தகவல் கொடுக்க அவரும் வந்து பிணத்தைப் பார்க்கிறார். புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. உயரதிகாரி கிளம்பச் செல்ல, விமல் அவரை வழியனுப்ப வருகிறார். உயரதிகாரி கிளம்பிய பிறகு, விமல் திரும்பினால் கூடவே காவலர் முனீஸ்காந்தும் நிற்கிறார். பிணத்தை யாரும் பார்த்துக் கொள்ள இல்லை. முனீஸ்காந்தைத் திட்டியபடி வேகமாக விமல் பிணத்தை வந்து பார்க்க, அதிர்ச்சி. பிணத்தின் தலையை மட்டும் காணவில்லை.

காணாமல் போன தலை.. அதை சுற்றி நகரும் புலனாய்வு கதை: OTT-யில் வெற்றி பெற்றதா விலங்கு படம்?

அவ்வளவுதான். தொடர் விறுவிறுப்படைகிறது. வீட்டிலிருந்து அழைப்பு வருகிறது. விமல் அழைப்பை ஏற்காமல் காவலர்களுடன் சேர்ந்து காட்டில் தலையைத் தேடுகிறார். எங்கும் காணவில்லை. திடுமென ஒருவன் விமலின் கண்ணில் பட, அவனை விரட்டிக் கொண்டு ஓடுகிறார் விமல். விமலைத் தொடர்ந்து பிற காவலர்களும் ஓடுகின்றனர். குறுக்கே ஒரு வாகனம் வர, அனைவரும் நிற்கின்றனர். அதற்குள் அந்த ஒருவன் எதிர்காட்டுக்குள் புகுந்து மறைகிறான். முனீஸ்காந்த் ஓடி வந்து விமலின் கர்ப்பிணி மனைவி வீட்டில் தடுமாறி கீழே விழுந்துவிட்டாரெனச் சொல்கிறார். வேறு வழியின்றி, விமல் மருத்துவமனைக்குச் செல்கிறார். மற்றக் காவலர்கள் தலையையும் சந்தேகத்துக்குரிய நபரையும் இரவு முழுக்கத் தேடுகின்றனர்.

மருத்துவமனையில் இனியாவுக்கு அந்த இரவே பிரசவ அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர். மீண்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலை. செய்தித்தாள்களில் தலையுடன் பிணம் இருந்த புகைப்படங்களும் வெளியாகி விடும். இரவு முழுக்க மருத்துவமனையில் இருக்கிறார் விமல். நினைத்தபடி மேலிடத்திலிருந்து அழுத்தம் வருகிறது. ஒருவாரத்துக்குள் தலை கண்டு பிடிக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது.

காணாமல் போன தலை.. அதை சுற்றி நகரும் புலனாய்வு கதை: OTT-யில் வெற்றி பெற்றதா விலங்கு படம்?

பிணத்தின் தலையை விமல் எப்படி கண்டுபிடித்தார், கொலைக்குக் காரணமான குற்றவாளி யார், வேலையைத் தக்க வைத்துக் கொள்ள விமல் என்ன செய்தார் ஆகியவை அடுத்தடுத்த எபிசோடுகளில் சுவாரஸ்யக் கதைகளாக விரிகின்றன.

தொடரைப் பிரசாந்த் பாண்டியராஜ் எழுதி இயக்கியிருக்கிறார்.

தொடர் முடிகையில் ஓர் அருமையான மலையாள நாவல் மொழிபெயர்ப்பைப் படித்த திருப்தி நமக்கு ஏற்படுகிறது. தமிழ்சினிமா சித்தரிக்கும் காவலராக இல்லாமல், வெகு இயல்பாக காவலர்களின் வாழ்க்கைச் சூழல் ஓர் எளிய கிராமப் பின்னணி மற்றும் கலாசாரத்துடன் காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு இடறல், படத்தில் சகட்டுமேனிக்குக் காட்டப்படும் வன்முறை!

காவல்துறை விசாரணைகளில் வன்முறை இருக்கிறது என விமர்சனங்கள் எழுப்பப்படும் காலத்தில், உண்மையைக் கண்டறிய காவலர்கள் தொடரில் காட்டும் வன்முறை, பார்ப்பவர்களின் மனங்களில் காவல்துறை வன்முறை நியாயமே என்கிற சிந்தனையை உருவாக்கும் ஆபத்து இருக்கிறது.

மற்றபடி விலங்கு, தமிழ்ச்சூழலுக்கேற்ற நல்ல இணையத் தொடர். பார்க்கலாம்!

banner

Related Stories

Related Stories