சினிமா

ஆஸ்கர் விருது தேர்வுகுழு உறுப்பினராக சூர்யாவுக்கு அழைப்பு - தமிழ் சினிமாவுக்கான அங்கீகாரம்!

நடிகர் சூர்யாவை ஆஸ்கரில் தேர்வு செய்யும் குழுவிற்கு அழைத்துள்ளது ஆஸ்கர் அகடமி.

ஆஸ்கர் விருது தேர்வுகுழு உறுப்பினராக சூர்யாவுக்கு அழைப்பு - தமிழ் சினிமாவுக்கான அங்கீகாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படமும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை என்ற ஏக்கம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் இருந்தது.

இந்நிலையில், தமிழ் ரசிகர்கள் ஏன் இந்திய ரசிகர்களே கொண்டாடும் அளவிற்கு தமிழ்நாட்டுக்கும், இந்தியாவிற்கு புகழ் சேர்க்கும் பணியில் நடிகர் சூர்யா இடம்பெற்றுள்ளார்.

என்.ஜி.கே. படத்தில் சூர்யா.
என்.ஜி.கே. படத்தில் சூர்யா.

சினிமா உலகின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுத்துள்ளது ஆஸ்கர் அகடமி.

தயாரிப்பாளர், இயக்குனர், எடிட்டர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்படும் 397 பேரை தேர்வு செய்து ஆஸ்கர் அகடமி புதிய உறுப்பினர்களுக்காக அழைப்பு விடுத்துள்ளது.

ஆஸ்கர் விருது தேர்வுகுழு உறுப்பினராக சூர்யாவுக்கு அழைப்பு - தமிழ் சினிமாவுக்கான அங்கீகாரம்!

அதேபோல், ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் அகடமி அழைப்பு விடுத்துள்ளது. 397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதல் நபராக நடிகர் சூர்யா உள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்திருக்கும் தமிழ் படமான ’ஜெய் பீம்’ திரைப்படத்தின் காட்சிகள் ஆஸ்கர் அகடமின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் திரையிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories