சினிமா

நடிகர் விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்: படத்தின் பெயர் என்ன தெரியுமா?

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்: படத்தின் பெயர் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'பீஸ்ட்' படத்தை அடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜயின் 66வது படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்கள் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி 66 படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்கள் இந்த போஸ்டரை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்: படத்தின் பெயர் என்ன தெரியுமா?

தளபதி 66 படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கில் வரசுடு என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் குடும்ப பின்னணி கொண்ட படமாக இருக்கும் என ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் 2023ம் தேதி பொங்களுக்கு படம் வெளியாகும் எனவும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்: படத்தின் பெயர் என்ன தெரியுமா?

இந்நிலையில் படத்திற்கு வாரிசு என பெயர்வைத்துள்ளது அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. நாளை விஜய் பிறந்தாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் பெயர் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories