சினிமா

"படத்தை விட ட்ரோல் நல்லா இருந்துச்சு".. பீஸ்ட் பட நடிகர் சர்ச்சை கருத்து: கொந்தளித்த ரசிகர்கள்!

பீஸ்ட் படத்தைத் தான் இன்னமும் பார்க்கவில்லை என்றும் ஆனால், படம் குறித்து வெளியான மீம்ஸ்களை பார்த்தேன் என்றும் 'பீஸ்ட்' படத்தில் தீவிரவாதியாக நடித்த நடிகர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

"படத்தை விட ட்ரோல் நல்லா இருந்துச்சு"..  பீஸ்ட் பட நடிகர் சர்ச்சை கருத்து: கொந்தளித்த ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் 'பீஸ்ட்'. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்திற்கு Promotion வேலைகளும் படு பயங்கரமாக நடந்தது. ஆனால் படம் வெளியான அன்றே, விமர்சன ரீதியாக பெரிதும் அடிவாங்கியது. இதனால் இந்த படத்தை, நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வந்தனர்.

"படத்தை விட ட்ரோல் நல்லா இருந்துச்சு"..  பீஸ்ட் பட நடிகர் சர்ச்சை கருத்து: கொந்தளித்த ரசிகர்கள்!

இந்நிலையில், படத்தில் மெயின் வில்லனுக்கு உதவியாக இருக்கும் தீவிரவாதிகளில் ஒருவராக நடித்த ஷைன் டாம் சாக்கோ, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ‘பீஸ்ட்’ படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘பீஸ்ட்’ படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல என்ட்ரி இல்லை என்றும், தான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை என்றும், ஆனால் troll-கள் பார்த்திருக்கிறேன் என்றும் நக்கலாக பதிலளித்திருந்தார்.

"படத்தை விட ட்ரோல் நல்லா இருந்துச்சு"..  பீஸ்ட் பட நடிகர் சர்ச்சை கருத்து: கொந்தளித்த ரசிகர்கள்!

மேலும் அந்த படத்தில், விஜய் டாம் ஷைனை கயிற்றால் கட்டித் தூக்கி வருவார். அது தொடர்பான காட்சி பற்றி பேசிய சாக்கோ, "ஒருவரை அடித்து தூக்கி வரும்போது, அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கி வரும் நபரின் முகத்தில் ரியாக்சன் இருக்க வேண்டும். அதாவது அவர் சிரமப்படுவது போன்று காட்சி இருக்க வேண்டும். ஆனால், படத்தில் ஏதோ ஒரு பேப்பரை தூக்கி வருவதுபோல விஜய் என்னைத் தூக்கி வருவார்" என்று விமர்சித்துள்ளார்.

இவரின் இந்த கருத்து விஜய் ரசிகர்களுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories