சினிமா

’நான் அழுதுவிட்டேன் சிவா’.. டான் வெற்றி விழாவில் சிம்பு குறித்துப் பேசிய சிவகார்த்திகேயன்!

டான் படத்தைப் பார்த்து சிம்பு அழுதுவிட்டதாகக் கூறினார் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

’நான் அழுதுவிட்டேன் சிவா’.. டான் வெற்றி விழாவில் சிம்பு குறித்துப் பேசிய சிவகார்த்திகேயன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லைகா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்த ‘டான்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, ஆர்.ஜே.விஜய், பால சரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையிலான ஜலபுல ஜங்கு பாடலுக்கு பட்டித் தொட்டியெங்கும் ‘டான்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் ‘டான்’ 100 கோடி வசூல் சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு வெளியான டாக்டர் படமும் 100 கோடி வசூலைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘டான்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்த்து சிம்பு அழுதுவிட்டதாக போனில் தெரிவித்தாக கூறினார்.

இது குறித்துப் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்," டான் படம் வெற்றிபெற்று வசூல் செய்தது 100 கோடிதான். ஆனா, அது எல்லாம் எனக்கில்ல. படத்தைப் பார்த்து விட்டு ரஜினி சார் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினார்கள். நடிகர் சிம்பு, சிவா படம் சூப்பரா இருக்கு. கடைசி சீனை என்னால் பாக்க முடியல. எனக்கு அப்பான உயிர். நான் அழுதுட்டேதான் படத்தைப் பார்த்தேன் என கூறினார். இந்த நேரத்தில் டான் படத்தைப் பார்த்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories