சினிமா

லோகேஷுக்கு Lexus மட்டுமல்ல: 16 உதவி இயக்குநர்களுக்கும் Costly பரிசு கொடுத்த விக்ரம் கமல்!

இயக்குநர் லோக்கேஷ் கனகராஜுக்கு Lexus காரை பரிசாக நடிகர் கமல் வழங்கியுள்ளார்.

லோகேஷுக்கு Lexus மட்டுமல்ல: 16 உதவி இயக்குநர்களுக்கும் Costly பரிசு கொடுத்த விக்ரம் கமல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ் கமலை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கமல் மட்டும் அல்லாமல் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன்தாஸ், காளிதாஸ் ஜெயராமன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளது.

இதனால் 'விக்ரம்' படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது. இந்நிலையில் 'விக்ரம்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் கமலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாஸ் படமாக 'விக்ரம்' அமைத்துள்ளது.

2015ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்திற்குப் பிறகு வெளியாக அனைத்து படங்களும் கமலுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் 2 படமும் கமலுக்கு கை கொடுக்கவில்லை.

தொடர்ச்சியாகப் படங்கள் ஓடாததால், பிக்பாஸ் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதுவும் அவருக்குப் புகழைப் பெரிதாகக் கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் 'விக்ரம்' படம் கமலுக்கு மீண்டும் தனது புகழைத் தேடிக் கொடுத்துள்ளது. இதனால் கமல் மிகுந்த உற்சாகத்திலிருந்து வருகிறார். இதையடுத்து படத்தின் இயக்குநர், நடிகர்கள் சூர்யா உள்ளிட்ட பலரையும் பாராட்டி ட்வீட் செய்து வருகிறார்.

மேலும் படம் வெளியான 4 நாட்களிலேயே 175 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. பார்ப்பவர்கள் எல்லோருக்கும் பிடித்த படமாக உள்ளது 'விக்ரம். இந்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து இயக்குநர் லோகேஷை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் கமல். இதனை லைஃப் டைம் செட்டில்மென்ட் என்று கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் இன்று மற்றொரு செட்டில்மென்ட் செய்துள்ளார் கமல். இது என்னவென்றால், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குநர்களுக்கும் TVS Apache RTP 160 பைக்கையும் பரிசு கொடுத்துள்ளார் விக்ரம் கமல். இதையடுத்து கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் விக்ரமை கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories