சினிமா

இணையத்தில் வைரலாகும் 'சக்கு சக்கு வத்திக்குச்சி'.. எந்த படத்தின் பாடல்?.. மகிழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜ்!

'சக்கு சக்கு வத்திக்குச்சி' பாடல் வைரலாகி வருவதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் 'சக்கு சக்கு வத்திக்குச்சி'.. எந்த படத்தின் பாடல்?.. மகிழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோக்கேஸ் கனகராஜ் கமலை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கமல் மட்டும் அல்லாமல் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன்தாஸ், காளிதாஸ் ஜெயராமன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளது.

இதனால் 'விக்ரம்' படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது. இந்நிலையில் 'விக்ரம்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் கமல் ரசிகர்களுக்குக் கமல் படமாகவும், லோக்கேஸ் கனகராஜ் ரசிகர்களுக்கு லோக்கேஸ் படமாகவும் என ஒவ்வொருவருக்கும் பிடித்தமாதிரி விக்ரம் அமைத்துள்ளது.

இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் இடம் பெற்றுள்ள பழைய பாடல் 'சக்கு சக்கு வத்திக்குச்சி' இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது என பலரும் தேடி வருகின்றனர்.

இந்த பாடல் 1995ம் ஆண்டு வெளிவந்த அசுரன் படத்தில் வரும் பாடல்தான் அது. இந்த படத்தில் அருண்பாண்டியன், நெப்போலியன், ரோஜா, மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்திருப்பார்கள்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், "'சக்கு சக்கு வத்திக்குச்சி' அனுபவம் குறித்து ட்விட்டரில் பகிர்த்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டரில், 1995ம் ஆண்டு இந்தப் பாடல் வி.ஜி.பி ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. ஆதித்தன் இசையமைத்தார். நான் ப்ரோக்ராம் செய்த இந்த பெப்பி விண்டேஜ் பாடல் வைரலாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories