சினிமா

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ’விக்ரம்’ - ஒரு கண்ணோட்டம்!

நொடிப் பொழுது ஆச்சரியங்கள் மட்டுமே அல்ல சினிமா என்பதை லோகேஷ் புரிந்து கொள்ள வேண்டும்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ’விக்ரம்’ - ஒரு கண்ணோட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

கமல் நடித்து வெளியான விக்ரம் படம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல நாட்கள் கடித்து கமல் நடித்திருக்கும் படம் என்பதாலும் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதாலும் படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. கமல் நடிக்கும் ஒரு Multi Starrer படம் என்பது ஒன்றே போதும் வணிக ரீதியாக வசூலை அள்ள. எனவே ‘விக்ரம்’ பெருவெற்றி பெறுவது ஆச்சரியமான விஷயமல்ல. ஆனாலும் படம் எப்படி இருக்கிறது?

ஒரு முகமூடி கூட்டம் தொடர் கொலைகளை செய்கிறது. படம் துவங்கும்போதே முகமூடிக் கூட்டத்தால் கமல் கொல்லப்பட்டு விடுகிறார். முகமூடிக் கூட்டத்தையும் கூட்டத்தின் தலைவனையும் துப்பறிந்து கண்டறிந்து அழிக்க வேண்டும் என முடிவாகிறது. அந்த வேலையை செய்வதற்கென ரகசிய காவல் பிரிவின் அதிகாரி பகத் பாசிலிடம் பொறுப்புக் கொடுக்கப்படுகிறது. மறுபக்கத்தில் போதை மருந்து உற்பத்தி செய்யும் தாதா விஜய் சேதுபதி. அவருக்குக் கிடைக்க வேண்டிய போதை மருந்தை காவல் துறை கைப்பற்றி விடுகிறது. அதைக் கைப்பற்றும் முயற்சியில் ஒரு காவல் அதிகாரி துணையுடன் முயன்று கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கத்தில் கமலின் கதை ஓடுகிறது. காவல் அதிகாரியாக இருந்த அவர், மகன் ஒரு ‘அண்டர் கவர் ஆபரேஷனில்’ கொல்லப்பட்டப் பிறகு, வேலை பார்க்காமல், மது மற்றும் மாதுவுக்கு அடிமையாகி சீரழிவாக இருக்கிறார். மகனைப் போல பேரனையும் இழந்துவிடக் கூடாது என பேரன் மீது மட்டும் அக்கறையுடன் இருக்கிறார்.

மூன்று கதைகளும் ஊடாடிச் சென்று இடைவெளியில் குவிகிறது. ஒரு முக்கியமான திருப்பம் நேர்கிறது. அது அனைவருக்கும் தெரிந்த திருப்பம்தான் எனினும் பலத்த கைதட்டல் பெறுகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ’விக்ரம்’ - ஒரு கண்ணோட்டம்!

கமல் கொல்லப்பட்டதை பகத் துப்பறிவதே முதல் பாதியை நிறைத்துவிடுகிறது. இரண்டாம் பாதியில்தான் கமல் பிரதான பாத்திரமாக வருகிறார். ஒரு துப்பறியும் கதையாக தொடங்கி நீளும் முதல் பாதியில் பகத் மற்றும் காயத்ரிக்கு இடையிலான காதல் கவிதையாய் மனதை நெகிழ வைக்கிறது.

இரு பாத்திரங்களுக்காக எழுதப்பட்ட கதையில் மூன்றாவது பாத்திரமாக கமல் நடித்திருக்கிறார். பகத் பாசிலும் விஜய் சேதுபதியும்தான் பிரதானப் பாத்திரங்கள். பகத் பாசிலின் கதை கொஞ்சம் சுவாரஸ்யம். அவரின் நடிப்பு காரணமாக இருக்கலாம்.

மற்றபடி காட்சி ஆக்கங்களில் வழக்கம் போல American Gangster, Dark Knight, Dark Knight Rises, Ghost Rider, Escobar எனப் பல ஆங்கிலப் படங்கள் மற்றும் ஓடிடி தொடர்களின் சாயலைப் பார்க்க முடியும். அனிருத் ஒரு படி மேல். ஹான்சிம்மரின் இசையையே அவரிடம் காண முடிந்தது.

கமல் நடிக்கிறார். பாத்திரத்துக்கு கனம் ஏற்ற வேண்டும் என்ற பதட்டத்தில் பேரன் என்கிறார்கள். மகன் மரணம் என்கிறார்கள். Drug free society என்கிறார்கள். கமல் பேசும் நீளமான வசனத்தில் 'தீவிரம்னா கெட்ட வார்த்தை இல்ல. It's a virtue' என்கிற வரி மட்டும்தான் தேறுகிறது.

மொத்த பாவ்லாக்களையும் தாண்டி வீடு சேர்ந்தும் பகத் மட்டும்தான் மனதில் இருக்கிறார். Poor guy.. Godfather பட Michael Corleone மாதிரியான ஒரு பாத்திரத்துக்கான நடிகர்... சோளப்பொறி போட்டே கொன்று விடுவார்கள் போல.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ’விக்ரம்’ - ஒரு கண்ணோட்டம்!

ஏஜெண்ட் டீனா ஒரு நல்ல ஆச்சரியம். ஆனால் ஏவெஞ்சர்ஸின் ஸ்கார்லெட் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இன்னும் சூர்யா-பகத், கார்த்தி-சூர்யா, கமல்-சூர்யா என்றெல்லாம் சீக்வெல்களும் ப்ரீக்குவெல்களும் வரப் போகின்றன என்பதை நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது.

இறுதியில் அந்த 'கலகல' மெஷின் ரக துப்பாக்கியை சுடும்போது.. சாரி கமல், ஒரு டீக்கடைச் சிறுவன் அறிமுகப்படுத்தி, போலீஸ் நிலையத்தையே பொசுக்கித் தள்ளும் ராக்கி பாயே எங்களின் தேர்வாக நிலை நிற்கிறான். நொடிப் பொழுது ஆச்சரியங்கள் மட்டுமே அல்ல சினிமா என்பதை லோகேஷ் புரிந்து கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories