சினிமா

‘பஞ்சதந்திரம்’ காம்போவை புரோமேஷனில் இறக்கிய ‘விக்ரம்’ படக்குழு! (வீடியோ)

விக்ரம் படத்தின் புரோமேஷனில் இறங்கியுள்ள படக்குழு, ‘பஞ்சதந்திரம்’ படத்தில் நடித்த நடிகளை ஈடுபடுத்தியுள்ளது.

‘பஞ்சதந்திரம்’ காம்போவை புரோமேஷனில் இறக்கிய ‘விக்ரம்’ படக்குழு! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குநராகியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் `விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

விக்ரம் படத்தை தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தில் மூன்று பெரிய ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

‘பஞ்சதந்திரம்’ காம்போவை புரோமேஷனில் இறக்கிய ‘விக்ரம்’ படக்குழு! (வீடியோ)

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு இன்று கோலகலமாக நடைப்பெற்றது.

மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் ட்ராக் லிஸ்ட் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் புரோமேஷனில் இறங்கியுள்ள படக்குழு, ‘பஞ்சதந்திரம்’ படத்தில் நடித்த நடிகளை ஈடுபடுத்தியுள்ளது. அதில் நடிகர் கமலஹாசனுடன் இணைந்து நடித்த, ரமேஷ் அரவிந்த், யுகி சேது, ஜெயராமன், ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கும் வகையில் விளம்பர புரோமோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories