சினிமா

பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து படத்தயாரிப்பில் களமிறங்கிய வசந்தபாலன்!

தனது பள்ளி தோழர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் வசந்த பாலன் தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து படத்தயாரிப்பில் களமிறங்கிய வசந்தபாலன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

‘கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் நடித்த துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை தனது பள்ளி தோழர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் வசந்த பாலன் தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் படங்களை இயக்கிய வசந்தபாலன் இப்படத்திலும் வித்தியாசமான கதையமைப்பை வடிவமைத்துள்ளார். ‘அநீதி’ படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து அர்பன் பாய்ஸ் தயாரிப்பில் நிறைய புதுமுக இயக்குநர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories