சினிமா

”தாய்மொழி அவமானம் அல்ல; அடையாளம்” : நெஞ்சுக்கு நீதி பார்த்துவிட்டு வந்த ஆரி அர்ஜுனன் கூறியது என்ன?

மொழி கற்றுக் கொள்கிறோம் என்பது முக்கியம் அல்ல. இதுதான் கற்று ஆக வேண்டும் என்றால் பிரச்சனை என நடிகர் ஆரி பேசியுள்ளார்.

”தாய்மொழி அவமானம் அல்ல; அடையாளம்” : நெஞ்சுக்கு நீதி பார்த்துவிட்டு வந்த ஆரி அர்ஜுனன் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடிகர் ஆரி அர்ஜுனன் மற்றும் சுரேஷ் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆரி,

இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு படம். ஒவ்வொரு வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் காட்ட வேண்டிய ஒரு படம். சாதிகள் இருக்குதடி பாப்பா என்று சொல்லிக்கொண்டிருக்கிற சமூகத்தில் இருக்கிறோம்.

சமூகநீதியை நாம் கொன்றுக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் அந்த கதாபாத்திரம் இறந்திருக்கிறது. தாய்மொழி அவமானம் அல்ல. அடையாளம். எவ்வளவு மொழி கற்றுக் கொள்கிறோம் என்பது முக்கியம் அல்ல. இதுதான் கற்று ஆக வேண்டும் என்றால் பிரச்சனை. எந்த மொழி கற்றுக் கொள்வதும் என்பது அவரவர்கள் விருப்பம்.

”தாய்மொழி அவமானம் அல்ல; அடையாளம்” : நெஞ்சுக்கு நீதி பார்த்துவிட்டு வந்த ஆரி அர்ஜுனன் கூறியது என்ன?

எந்த மொழியில் பிறந்தோம் என்பது அவமானமல்ல. அது பெருமை. அதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

சாதிய பாகுபாடு எனக்கும் நடந்திருக்கிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் சாதிய பாகுபாடு இல்லாமல் இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும்.

எனக்காக கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகிறது என்ற விதையை அம்பேத்கர் விதைத்திருக்கிறார். அம்பேத்கர் சாதி தலைவர் அல்ல சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு தலைவர்.

பெயரின் பின்னாடி இருக்கக்கூடிய ஜாதியை தமிழ்நாட்டில் ஒழித்திருக்கிறோம். பெயரிலே தமிழ்நாடு இருக்கிறது. முழுவதுமாக மாறி இருக்கிறாதா என்று கேட்டால் மாறி இருக்கிறது என்று சொல்ல முடியும் என்றார்.

banner

Related Stories

Related Stories