சினிமா

Mr. ROMEO படத்தின் ஹிட் பாடலை பாடிய பிரபல பாடகி சங்கீதா சஜித் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

200க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

Mr. ROMEO படத்தின் ஹிட் பாடலை பாடிய பிரபல பாடகி சங்கீதா சஜித் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவைச் சேர்ந்தவர் சங்கீதா சஜித். பின்னணி பாடகியா இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் ' என்றே சொந்தம் ஜானகிகுட்டி' என்ற மலையாள படத்தில்தான் முதல் முறையாகப் பாடகியாக அறிமுகமாகிறார்.

இவர் பாடிய முதல் பாடல் 'அந்திரி பூவட்டம் பொன்னுருளி' ஆகும். இதன் பிறகு மலையாள சினிமாவில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி பெரிய ஷிட் அடித்த அய்யப்பனும் கோசியும் படத்தில் 'தாளம் போயி தப்பும் போயி' என்ற பாடலை சங்கீதா சஜித் பாடியுள்ளார்.

தமிழில் இவர் குறைவான படங்களுக்கே பாடியுள்ளார். முதல்முறையாக நாளைய தீர்ப்பு என்ற படத்தில்தான் அவர் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் மிஸ்டர் ரோமியோ படத்தில் `தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை; தங்கத்தைக் காதலிக்கும் பெண்களா இல்லை' என்ற இவர் பாடிய பாடல் மெகா ஹிட்.

அண்மையில் சிறுநீரக நோய் காரணமாகத் திருவனந்தபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் இன்று சங்கீதா சஜித் மரணம் அடைந்துள்ளார். இவரின் இறப்பு செய்தியை அறிந்து திரையுலகத்தினர் அனைவரும் அவருக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories