சினிமா

20 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கதை.. பிரம்மாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ள KGF இயக்குநர்! #5IN1_CINEMAS

‘மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாறியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கதை..  பிரம்மாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ள KGF இயக்குநர்! #5IN1_CINEMAS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மீண்டும் மாறியது ‘மாமனிதன்’ ரிலீஸ் தேதி!

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். ஏற்கனவே மூன்று முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள இந்த படம் வரும் ஜூன் 24ஆம் தெதி வெளியாகும் என சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. தற்போது அதற்கு ஒரு நாள் முன்னதாக ஜூன் 23ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கதை..  பிரம்மாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ள KGF இயக்குநர்! #5IN1_CINEMAS

விஜய் சேதுபதி பொன்ராம் படத்தின் ரிலீஸ் எப்போது?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 46வது திரைப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி போலிஸாக நடிக்க அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘கே.ஜி.எஃப்’- யை தாண்டிய கனவு படம் ஜூனியர் என்.டி.ஆரின் படம்!

கே.ஜி.எஃப் படங்களின் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் முக்கிய இயக்குனராகிவிட்டார் பிரஷாந்த் நீல். தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கிவரும் இவர் அடுத்து ஜூனியர் என்.டி. ஆர் நடிக்க இருக்கும் படத்தை இயக்கவுள்ளார். என்.டி.ஆர் நடிக்க இருக்கும் 31வது படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் கதைக்களம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தன் மனதில் தோன்றியது என்றும், ஆனால் அப்போது அதன் பிரம்மாண்டத்தை எண்ணி பயந்தேன். ஆனால் இப்போது என்னுடைய கனவு படைப்பை கனவு நாயகனோடு உருவாக்குவதற்கான காலம் அமைந்துள்ளது” என பிரஷாந்த் கூறியுள்ளார்.

மகளுக்காக தெலுங்கில் படமியக்கும் ஆக்‌ஷன் கிங்...

நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததை அடுத்து அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .இந்த நிலையில் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ள ஆக்சன்கிங் அர்ஜூன், அந்த படத்தை அவரே இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் இந்த படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஓடிடி ரிலீஸ் தகவல்!

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பின்னர் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த படத்திற்காக அமேசான் மிகப்பெரிய தொகையை கொடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ரிலீஸ் அப்டேட்டுடன் இந்த தகவலும் உறுதி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories