சினிமா

’வாத்தி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. சிம்புவின் ‘பத்து தல’ படப்பிடிப்பு எப்போது?

வாத்தி தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளார்.

’வாத்தி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. சிம்புவின் ‘பத்து தல’  படப்பிடிப்பு எப்போது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. வாத்தி படப்பிடிப்பில் இணைந்த முன்னணி நடிகை!

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வாத்தி’. கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இதில் நாயகி சம்யுக்தாவும் இணைந்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து போட்டோ பதிவிட்டுள்ளார் சம்யுக்தா.

’வாத்தி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. சிம்புவின் ‘பத்து தல’  படப்பிடிப்பு எப்போது?

2. சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ ஷூட்டிங் எப்போது?

சூப்பர் ஹிட் கன்னட திரைப்படமான ‘மஃப்டி’ தமிழில் ‘பத்து தல’ எனும் பெயரில் ரீமேக்காகி வருகிறது. இதில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவாணி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சிம்பு நடிக்கவேண்டிய காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில் வரும் 27ஆம் தேதி முதல் சிம்பு நடிக்கும் காட்சிகளையும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார்.

3. OTT-யில் வெளியானது மோகன் லால் படம்!

மோகன்லால், ஜூத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திருஷ்யம், திருஷ்யம் 2 ஆகிய படங்கள் மலையாளம் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டாகிருந்தது. தற்போது இவர்கள் கூட்டணியில் ‘12த் மேன்’ எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

4. கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘ராக்கெட்டரி’!

மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்தை ஏ.ஆர் ரகுமான், பார்த்திபன், பா. ரஞ்சித் உள்பட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் பார்த்தனர். இந்த படத்தை பார்த்து ஏ.ஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் மிகச்சிறந்த படம் என்றும் மாதவன் மேல் தனது மரியாதை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் பார்த்திபன் இந்த படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

5. முடிவுக்கு வந்தது பரத்தின் 50வது படம்

பரத், வாணிபோஜன் நடிப்பில் ஆர்.பி. பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லவ். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை ஒரே மாதத்தில் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories