சினிமா

இது 5in1_cinemas: காத்துவாக்குல ரெண்டு காதல் OTT ரிலீஸ் எப்போது? லீக் ஆன படக்குழுவின் whatsapp chats!

இது 5in1_cinemas: காத்துவாக்குல ரெண்டு காதல் OTT ரிலீஸ் எப்போது? லீக் ஆன படக்குழுவின் whatsapp chats!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. 297 திரையரங்குகளில் இன்று வெளியாகும் கார்த்தியின் ‘கைதி’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வந்த படம் ‘கைதி’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சமீபத்தில் ஜப்பானில் ரிலீஸ் செய்திருந்தனர், அதனை தொடர்ந்து இன்று ரஷ்யாவில் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனைக் கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

2. பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் திரைப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைய உள்ளது ‘இரவின் நிழல்’ .

இது 5in1_cinemas: காத்துவாக்குல ரெண்டு காதல் OTT ரிலீஸ் எப்போது? லீக் ஆன படக்குழுவின் whatsapp chats!

இந்த படத்தை நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது. ஏற்கனவே படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆவலை அதிகரித்துவரும் நிலையில், படத்தை ஜூன் 24ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது.

3. 'பிகே' பாணியில் ஒரு தமிழ்ப்படம் - ஜூலையில் படப்பிடிப்பு துவக்கம்...

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ’பெரியாண்டவர்’. இந்த படம் 1970கள் மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடப்பது போன்று உருவாக உள்ளது. சிவபெருமான் பூமிக்கு வந்து ஒரு பெண்ணை சந்தித்து அவரோடு பயணிப்பது தான் இந்த படத்தின் கதை. இதில் சிவபெருமானாக யோகி பாபு நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்றும் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

4. ஓடிடிக்கு வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’...

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

திரையரங்குகளில் வெளியாகி 50 கோடிக்கும் அதிகமாக வசூலானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் தற்போது மே 27ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5. கார்த்தியின் விருமன் பட ரிலீஸ் தேதி...

கார்த்தி நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிவரும் படம் ‘விருமன்’. முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

இது 5in1_cinemas: காத்துவாக்குல ரெண்டு காதல் OTT ரிலீஸ் எப்போது? லீக் ஆன படக்குழுவின் whatsapp chats!

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கிராம பின்னணியில் உருவாகிவரும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே படத்தை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories