சினிமா

5in1_Cinemas : வெளியானது KGF-2 பாடல்.. ட்ரெண்டிங்கில் Toofan.. இந்தியில் ரீமேக் ஆன, நானி படம்!

5in1_Cinemas : வெளியானது KGF-2 பாடல்.. ட்ரெண்டிங்கில் Toofan.. இந்தியில் ரீமேக் ஆன, நானி படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்டிபென்டட் இசைக் கலைஞராக பாடல்கள் பாடி, சினிமாவில் அறிமுகமானவர் அறிவு. இவர் ரஜினி, விஜய், தனுஷ் உட்பட முன்னணி நடிகர்களின் படங்களில் பாடகராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றினார். திரை இசை மட்டுமல்லாது, இன்டிபென்டன்டாக சந்தோஷ் நாராயணன் இசையில், பாடகி தீயுடன் இணைந்து இவர் பாடிய எஞ்சாயி எஞ்சாமி உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போதும் இவர் சொந்தமாக பாடல்களை உருவாக்கி, ம்யூசிக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் இசையில் `சிலோன்கார்' என்ற பாடலின் மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது.

`மேஜர்' படத்தின் வீடியோ பாடல் வெளியானது!

நடிகர் மகேஷ்பாபு தயாரிப்பில் சசி கிரண் இயக்கியிருக்கும் தெலுங்குப் படம் 'மேஜர்'. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இந்தப் படம். நடிகர் அத்வே ஷேஷ் இந்தப் படத்தில் சந்தீப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கூடவே ஷோபிதா, பிரகாஷ் ராஜ், ரேவதி, முரளி ஷர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திலிருந்து `ஓ இஷா' என்ற வீடியோ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது.

வெளியானது கே.ஜி.எஃப் 2 பட `தூஃபான்' வீடியோ பாடல்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து 2018ல் வெளியான கன்னடப்படம் `கே.ஜி.எஃப்'. கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ் உட்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

இதன் இரண்டாம் பாகமும் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூலை குவித்தது. ரவி பஸ்ரூர் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே படத்திலிருந்து ஒவ்வொரு வீடியோ பாடலையும் வெளியிட்டு வந்தனர். தற்போது, படத்திலிருந்து `தூஃபான்' என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர்.

இந்தியில் ரீமேக் ஆன, நானி படம்!

வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி, பூமிகா நடித்து வெளியான தெலுங்குப் படம் 'MCA'. வசூல்ரீதியாக பெரிய வெற்றியடைந்தது இந்தப் படம். இந்தப் படத்தை இந்தியில் `நிகம்மா' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். சபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷில்பா ஷெட்டி, அபிமன்யூ, ஷெர்லி, சமீர் சோனி ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

ஷீ-ஹல்க்' வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது!

மார்வல் காமிக்ஸ் பொறுத்தவரை சூப்பர் ஹீரோக்கள் போலவே, சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரங்களும் மிகப் பிரபலம். அப்படி பிரபலமான ஒரு கதாபாத்திரம் தான் ஷீ-ஹல்க். இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வலும் - டிஸ்னியும் இணைந்து ஒரு வெப் சீரிஸை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் ஷீ ஹல்க் கதபாத்திரத்தில் கன்னடாவைச் சேர்ந்த டைட்டான (Tatiana Maslany) நடித்திருக்கிறார். தற்போது இந்த சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். ஆகஸ்ட் 17ம் தேதி டிஸ்னி தளத்தில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories