சினிமா

ஆகஸ்டில் தொடங்குகிறது ரஜினி 169.. ரீ ரிலீஸாகிறது RRR : இது 5in1_Cinema !

ஆகஸ்டில் தொடங்குகிறது ரஜினி 169.. ரீ ரிலீஸாகிறது RRR : இது 5in1_Cinema !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆகஸ்டில் துவங்கும் `ரஜினி 169' பட ஷூட்!

விஜயின் `பீஸ்ட்' படத்திற்குப் பிறகு நெல்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ரஜினி நடிக்கும் 169வது படமாக இது உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங், ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்கப்பட்டது தனுஷின் `வுண்டர்பார்' யூட்யூப் சேனல்!

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தொடர்ச்சியாக பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் `வுண்டர்பார் ஃபிலிம்ஸ்'. இந்த நிறுவனத்தின் யூட்யூப் சேனலில், அவர்கள் தயாரிக்கும் படத்தின் பாடல்கள் டிரெய்லர் போன்றவை வெளியிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் `வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' யூட்யூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது. கூடவே அவர்களது தயாரிப்பில் உருவான பல பட வீடியோக்களும், அதிக வீயூவ்ஸ் பெற்ற ரௌடி பேபி உள்ளிட்ட பல பாடல்களும் நீக்கப்பட்டது. ஒரு நாள் முழுக்க முயற்சி செய்து இன்று அந்த யூ-ட்யூப் சேனலை மீட்டிருக்கிறது தனுஷ் தரப்பு. இதற்காக யூ-ட்யூப் தளத்திற்கு நன்றி தெரிவித்து, ட்வீட் செய்திருக்கிறது `வுண்டர்பார்' நிறுவனம்.

`போத்தனூர் தபால் நிலையம்' பட வீடியோ பாடல்!

அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கி அவரே முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'போத்தனூர் தபால் நிலையம்'. இது ஒரு கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்ட பீரியட் படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக 90களில் ஒரு தபால் அலுவலகத்தில் நடக்கும் கொள்ளையைப் பற்றிய படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன். சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்கள் வைத்து எடுக்கப்பட்டாலும், தரமான சினிமாவாக உருவாகியுள்ளது இப்படம். இந்தப் படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் மே 27ம் தேதி வெளியாவுள்ள நிலையில், தற்போது இந்தப் படத்திலிருந்து டைட்டில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

`தி லெஜண்ட்' படத்தின் இரண்டாவது பாடல்!

ஜே.டி - ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடித்திருக்கும் படம் `தி லெஜண்ட்'. இதில் ஊர்வசி ரௌடலா, கீத்திகா நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். கூடவே நாசர், பிரபு, விஜயகுமார், யோகிபாபு மறைந்த நடிகர் விவேக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திலிருந்து `மொசலோ மொசலு' என்ற பாடல் வெளியிட்டனர். தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாடலாக `வாடி வாசல்' என்ற பாடலை மே 20ம் தேதி வெளியிட உள்ளனர்.

அமெரிக்காவில் ரீ-ரிலீஸ் ஆகும் ராஜமௌலியின் RRR

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம் `RRR'. இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிடைந்தது. தியேட்டர் ரிலீஸ்க்குப் பிறகான ஓடிடி வெளியீடாக மே 20ம் தேதி ஸீ5 ஓடிடி தளத்திளும் ஜூன் 3ம் தேதி இதன் இந்திப் பதிப்பு நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் RRR படம் அமெரிக்காவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஜூன் 1ம் தேதி அமெரிக்காவில் குறிப்பிட்ட சில திரையங்கில் RRR வெளியாக உள்ளது. கூடவே இது படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளும் சேர்த்து Un Cut வெர்ஷனாக திரையிடப்பட இருக்கிறது.

banner

Related Stories

Related Stories