சினிமா

“கமல்ஹாசன் படத்தை இயக்குகிறேன்” - பா.ரஞ்சித் அறிவிப்பு : ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இணையும் ஃபகத் பாசில்!

"விரைவில் கமல் நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளேன். அது மதுரை சம்பந்தப்ப படமாக இருக்கும்" என தெரிவித்தார் இரஞ்சித்.

“கமல்ஹாசன் படத்தை இயக்குகிறேன்” - பா.ரஞ்சித் அறிவிப்பு : ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இணையும் ஃபகத் பாசில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1. "கமல்ஹாசன் படத்தை இயக்குகிறேன்" - இயக்குநர் பா இரஞ்சித்!

கமல் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் படம் `விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என சமீபத்தில் நடந்த ஆடியோ லான்சில் இயக்குநர் லோகேஷ் அறிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் பரபரப்பான இன்னொரு செய்தியை இயக்குநர் பா.இரஞ்சித் பகிர்ந்திருந்தார். "விரைவில் கமல் நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளேன். அது மதுரை சம்பந்தப்ப படமாக இருக்கும்" என தெரிவித்தார் இரஞ்சித்.

நிகழ்வில் இறுதியாக பேசிய நடிகர் கமலும் "இரஞ்சித்தும் நானும் இணையும் படம் மிக நல்ல படமாக இருக்கும்" எனக் கூறி இந்த செய்தியை உறுதிபடுத்தினார்.

“கமல்ஹாசன் படத்தை இயக்குகிறேன்” - பா.ரஞ்சித் அறிவிப்பு : ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இணையும் ஃபகத் பாசில்!

2. நயன்தாராவின் `ஓ2' பட டீசர்!

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படங்களில் ஒன்று ‘ஓ2’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜி.எஸ். விக்னேஷ் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க பேருந்திலே நடக்கும் கதைக் களத்தைக் கொண்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாராவிற்கு வில்லனாக ‘கே13’ பட இயக்குனர் பரத் நீலகண்டன் நடிக்கின்றார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய நிலையில் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

வெளியானது `இரவின் நிழல்' பட புதிய வீடியோ!

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `இரவின் நிழல்'. உலகத்திலேயே முதன் முறையாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் படமாக உருவாகியிருக்கிறது இப்படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இரண்டு பாடலும், டீசரும் சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது. படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில் வாங்கினார் தயாரிப்பாளர் கலைபுலி தாணு. இந்நிலையில் படத்தின் புதிய ப்ரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

4. `மாமன்னன்' படப்பிடிப்பில் இணையும் ஃபகத் பாசில்!

`பரியேறும் பெருமாள்', `கர்ணன்' படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் `மாமன்னன்'. இந்தப் படத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் படத்தில் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தற்போது ஃபகத் பாசில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மே 20ம் தேதி முதல் கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

5. பிரஷாந்தின் `அந்தகன்' பட ரிலீஸ் தேதி!

இந்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் அந்தாதுன். இதனுடைய தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த் நடித்துள்ளார். `அந்தகன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். படத்தில் பிரஷாந்துடன் சிம்ரன், ப்ரியா ஆனந்த் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 1ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories