சினிமா

மீண்டும் இணையும் ‘மகாமுனி’ கூட்டணி.. விஜய் சேதுபதி காட்டில் மழை - கைவசம் 5 படங்கள்!

ஆகஸ்ட் 11ஆம் கோப்ரா படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் ‘மகாமுனி’ கூட்டணி.. விஜய் சேதுபதி காட்டில் மழை - கைவசம் 5 படங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் எப்போது!

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி உலகளவில் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. தென்னிந்திய சினிமாவின் மற்றொரு பிரம்மாண்ட படைப்பாக வெளியான இந்த படத்தை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 20ஆம் தேதி ஜீ 5 தளத்தில் படம் வெளியாகவுள்ளது.

மீண்டும் இணையும் ‘மகாமுனி’ கூட்டணி!

ஆர்யா நடிப்பில் வெளியாகி பல திரைப்பட விழா மேடைகளில் விருதுகளை வென்ற படம் ‘மகாமுனி’. சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகிருந்த இந்த படத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் பல விருது மேடைகளில் மகாமுனி வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் ஆர்யா - சாந்தகுமார் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்கப்படுகிறது.

மீண்டும் இணையும் ‘மகாமுனி’ கூட்டணி.. விஜய் சேதுபதி காட்டில் மழை - கைவசம் 5 படங்கள்!

பெண் இயக்குநரின் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநராக உருவெடுத்துள்ளார் நாய்லா அல் காதிஜா. இவர் இயக்கிவரும் ’பாப்’ என்ற திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சமீபத்தில் துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஏ.ஆர். ரஹ்மானிடம் இந்த படத்தின் சில காட்சிகளை காட்டி நாய்லா அல் பாப் படத்திற்கு ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளார்.

மீண்டும் இணையும் ‘மகாமுனி’ கூட்டணி.. விஜய் சேதுபதி காட்டில் மழை - கைவசம் 5 படங்கள்!

கோப்ரா ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்கள் விக்ரமிற்கு ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆக்‌ஷன் திரில்லராக உருவாகிவரும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி காட்டில் மழை!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘மும்பைகார்’ , ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ மற்றும் பேமிலி மேன் இயக்குனர்களின் ‘ஃபார்ஸி’ ஆகியவற்றில் நடித்து வரும் இவருக்கும் மேலும் 2 இந்தி பட வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 5 ஹிந்தி படங்கள் விஜய் சேதுபதி வசம் இருப்பதால் புதியதாக தமிழ் படங்கள் எதுவும் அவர் ஒப்பந்தம் செய்துக்கொள்வது இல்லை என சொல்லப்படுகிறது

banner

Related Stories

Related Stories