சினிமா

'விஜய் 66' - அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்.. விக்ரம் படத்தில் சூர்யா! #5IN1_CINEMA

பா.ரஞ்சித் தயாரிக்கும் 'சேத்துமான்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

'விஜய் 66' - அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்..  விக்ரம் படத்தில் சூர்யா!  #5IN1_CINEMA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. ‘விஜய் 66’ படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்!

பிஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லியுடன் இனைந்து தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். குடும்ப உறவுகள் பற்றி பேசும் படமாக உருவாகிவரும் இந்த படத்தில் நட்சத்திரப்பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விஜய் 66 குறித்து பேசிய இவர் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருப்பதாகவும் அதில் மூன்று பாடல்கள் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை கவரும் விதமாக உருவாக்கிவருகிறேன் எனவும் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. டான் படத்தில் இருந்து வீடியோ பாடல் க்ளிம்ஸ் ரிலீஸ்!

அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகியுள்ள ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வரும் மே 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி வைரலான நிலையில் ஜலபுலஜங்கு பாடலின் வீடியோ க்ளிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் வெறித்தமான நடத்தில் அமைந்துள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

3. பா.ரஞ்சித் தயாரிக்கும் சேத்துமான் பட டீசர் வெளியாகியுள்ளது!

நீலம் புரொடக்ஷன்ஸின் அடுத்த தயாரிப்பாக ‘சேத்துமான்’ என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை திரைக்கதை எழுதி தமிழ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் மே 27 ஆம் தேதி முதல் பிரிமீயர் ஆக உள்ளது. இந்த அறிவிப்போடு தற்போது சேத்துமான் படத்தின் டீசரும் இணையத்தில் வெளியாகியுள்ளது. வசனங்கள் எதுவும் இல்லாமல் முழுக்க காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றைக் கொண்டே டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.

4. கமலின் விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று வெளியான ‘பத்தல பத்தல’ பாடலும் இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறிய கேமியோவில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

5. ஜூன் 10 ரிலீஸாகவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்!

சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’, பத்து தல ஆகிய படங்களில் கவணம் செலுத்தி வருகிறார். இதனிடையே சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ‘மஹா’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகி ஹன்சிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories