சினிமா

நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கும் இயக்குநர்.. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ சென்சார் அப்டேட்! 5IN1_CINEMA

சமூகம் பெண்களுக்கு கொடுக்கும் அழுத்தம் பற்றியும் பேசியிருந்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கும் இயக்குநர்.. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ சென்சார் அப்டேட்! 5IN1_CINEMA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1. சென்சார் சான்றிதழ் பெற்றது `தி கிரேட் இந்தியன் கிச்சன்'

ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்த்ரன் நடித்துள்ள படம் `தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இது 2021ல் ஜோ பேபி இயக்கி மலையாளத்தில் வெளியான கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக். பெண் அடிமைத்தனத்தை பற்றியும், சமூகம் பெண்களுக்கு கொடுக்கும் அழுத்தம் பற்றியும் பேசியிருந்த இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகிவரும் நிலையில், தற்போது படத்தின் தணிக்கை முடிந்து `யு/ஏ' சான்றிதழ் பெற்றிருக்கிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

2. அடுத்த மாதம் துவங்குகிறது ஹலிஹா ஷமீமின் `மின்மினி' படப்பிடிப்பு!

`பூவரசம் பீப்பி', `சில்லுக் கருப்பட்டி', `ஏலேய்', அமேஸான் ப்ரைமில் வந்த `லோனர்ஸ்' போன்ற படங்களை இயக்கியவர் ஹலீதா ஷமீம். இவரின் இரண்டாவது படமாக `மின்மினி' படத்தைத் துவங்கினார். இதில் எஸ்தர் அனில், கௌரவ், பிரவீன் கிஷோர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது ஒரு Coming of age வகைப் படம் என்பதால், படத்தின் முதல்பாதியில் அதில் நடிக்கும் சிறுவர்களின் பள்ளிப்பருவமும், இரண்டாம் பாதி அவர்கள் வளர்ந்த பின்பு படமாக்குவதாகவும் திட்டமிட்டிருந்தார். தற்போது இந்த ஆறு வருடங்களில் அந்த நடிகர்கள் கதைக்குத் தகுந்தது போல் வளர்ந்துவிட்டதால், அடுத்தகட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் துவங்க இருக்கிறார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் ஹலிதா.

3. நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கும் இயக்குநர்!

அருள்நிதி நடித்த `கே13' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பரத் நீலகண்டன். இவர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். அதில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் `ஓ2' படமும் ஒன்று. இதில் நயன்தாராவுக்கு வில்லனாக பரத் நீலகண்டன் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க பேருந்திலேயே நடக்கும் கதைக் களத்தைக் கொண்டுள்ள இந்தப் படத்தை ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.

4. துல்கர் சல்மானின் `Chup' படம் வெளியீடு எப்போது?

இந்தி சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பால்கி. இவர் இயக்கி அடுத்து வெளியீட்டுக்குத் தயாராகிவரும் படம் `Chup'. இதில் துல்கர் சல்மான், சன்னி தியோல், ஸ்ரேயா தன்வந்திரி, பூஜா பட் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சைகலாஜிகல் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் இப்படத்தை வெளியிட உள்ளனர். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. கிறிஸ்மஸ் ஸ்பெஷலாக வெளியாகும் ரன்வீர் சிங்கின் `சர்கஸ்'

ரோஹித் ஷெட்டி இயக்கி ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகிவரும் இந்திப் படம் `சர்கஸ்'. ஏற்கெனவே இதே கூட்டணியில் உருவான `சிம்பா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. ரன்வீர் சிங் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜாகுலின் ஃபெர்னாண்டஸ், வருண் ஷர்மா எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி படம் டிசம்பர் 23ம் தேதி வெளியாக உள்ளது. இம்மாதம் 27ம் தேதி ரன்வீர் சிங் நடிப்பில் `ஜெயீஷ்பாய் ஜோர்தார்' படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories