சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ரசிகருடன் வீடியோ காலில் பேசிய விஜய்.. SK ஜோடியாகும் சாய் பல்லவி! 5IN1_CINEMA

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படம் வெளியானது. அதில் விஜய் தனது ரசிகர் ஒருவரின் குடும்பத்தினருடன் பேசியிருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ரசிகருடன் வீடியோ காலில் பேசிய விஜய்.. SK ஜோடியாகும் சாய் பல்லவி! 5IN1_CINEMA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1. படப்பிடிப்பு தளத்திலிருந்து ரசிகருடன் வீடியோ கால் பேசிய விஜய்!

`பீஸ்ட்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை வம்சி இயக்குகிறார். விஜயின் 66வது படமாக உருவாகும் இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இதில் யோகிபாபு, ஷ்யாம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயசுதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இதனுடைய முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து, இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படம் வெளியானது. அதில் விஜய் தனது ரசிகர் ஒருவரின் குடும்பத்தினருடன் பேசியிருக்கிறார். இதை சம்பந்தப்பட்ட அந்த ரசிகர், புகைப்படமாக தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைக்க, அது சில நிமிடங்களில் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.

ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ரசிகருடன் வீடியோ காலில் பேசிய விஜய்.. SK ஜோடியாகும் சாய் பல்லவி! 5IN1_CINEMA

2. நேரு உள்விளையாடு அரங்கில் `விக்ரம்' பட ஆடியோ லான்ச்!

கமல் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் `விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளை `பத்தல பத்தல' என்ற முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு எங்கு நடைபெறும் என்ற குழப்பம் இருந்து வந்தது. தற்போது `நேரு உள்விளையாட்டு அரங்கில்' இந்த நிகழ்வு நடைபெறும் என அறிவித்திருக்கிறது படக்குழு.

3. சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி.

`ரங்கூன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இதனையடுத்து இவர் இயக்கும் படத்தை கமல்ஹாசனின், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என சில மாதம் முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தில் நாயகியாக சாய் பல்லவி இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியா, மாரி 2, என்.ஜி.கே, பாவக்கதைகள், கார்கி படங்களைத் தொடர்ந்து சாய் பல்லவி நடிக்கும் ஆறாவது தமிழ்ப் படம் இது.

4. சந்தானத்தின் `குலுகுலு' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மேயாத மான், ஆடை படங்களை இயக்கியவர் ரத்னகுமார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும், கமல்ஹாசன் நடித்திருக்கும் `விக்ரம்' படத்திலும் கதையாக்கத்தில் பணியாற்றினார். இதற்கு அடுத்தாக சந்தானம் நடிப்பில் `குலு குலு' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதுதவிர சந்தானம் நடித்த `ஏஜென்ட் கண்ணாயிரம்' படமும் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

5. `குற்றப் பரம்பரை'ஐ வெப் சீரிஸாக இயக்குகிறாரா சசிக்குமார்?

வேலா ராமமூர்த்தி எழுதிய நாவல் `குற்றப் பரம்பரை'. இந்த நாவலை படமாக்க பாரதிராஜா, பாலா போன்ற இயக்குநர்கள் முயன்றனர், ஆனால் அது முழுமையடைவில்லை. தற்போது இந்த நாவலை மையமாக வைத்து இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் ஒரு வெப் சீரிஸை இயக்க உள்ளார் என தகவல்கள் உலவி வருகிறது. சுப்ரமணியபுரம், ஈசன் படங்களுக்குப் பிறகு நடிப்பில் தீவிரமாக இயங்கிவரும் சசிக்குமார் இந்த வெப் சீரிஸ் மூலம் மீண்டும் இயக்குநாராக களம் இறங்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், இந்த செய்தி இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories