சினிமா

மீண்டும் தள்ளிப்போன சிம்பு படம்... வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ட்ரெய்லர்! #5in1_Cinema

சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ‘மஹா’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தள்ளிப்போன சிம்பு படம்... வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ட்ரெய்லர்! #5in1_Cinema
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. ‘கோப்ரா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்கள் விக்ரமிற்கு ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆக்‌ஷன் திரில்லராக உருவாகிவரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி வைரலான நிலையில் தற்போது ஆதிரா என்கிற முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.

2. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. ஏப்ரல் 28ஆம் தேதி உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே படத்தின் ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

3. அடுத்தடுத்த படங்களில் ஜெயம் ரவியுடன் இணையும் முன்னணி நடிகை.

நடிகர் ஜெயம் ரவிக்கு தற்போது பொன்னியின் செல்வன், ஜன கன மன, அகிலன், தனி ஒருவன் 2 உட்பட டைட்டில் அறிவிக்கப்படாத சில படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. தொடர்ந்து ஜெயம் ரவி ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

4. மீண்டும் ரிலீஸ் மாற்றி அமைக்கப்பட்ட ‘மஹா’ திரைப்படம்

சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’, பத்து தல ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ‘மஹா’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகி ஹன்சிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், மீண்டும் ரிலீஸை மே 27ஆம் தேதி மாற்றியுள்ளதாக படத்தை வெளியிடும் ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.

5. ஜீவா, பிரியா பவானி சங்கர் இணையும் புதிய படம்!

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிப்பது மற்றும் நல்ல படங்களை வெளியிடுவது என தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளராக செயல்பட்டு வருகிறார் எஸ்.ஆர்.பிரபு. இவரது தயாரிப்பில் அடுத்து உருவாகவிருக்கும் படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories