சினிமா

5in1_Cinema : மீண்டும் திரைக்கு வருகிறார் நஸ்ரியா.. நானி வெளியிட்ட அடடே சுந்தரா பட அப்டேட்!

5in1_Cinema : மீண்டும் திரைக்கு வருகிறார் நஸ்ரியா.. நானி வெளியிட்ட அடடே சுந்தரா பட அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

`அசோக வனம்லோ அர்ஜூன கல்யாணம்' பட ரிலீஸ் தேதி!

வித்யாசாகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `அசோக வனம்லோ அர்ஜூன கல்யாணம்'. விஷ்வாக் சென், ருக்ஷர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ரிலீஸூக்கு தயாராகிவிட்டாலும் வெளியிடாமல் இருந்தனர். கடந்த மார்ச் 4ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு கூட வெளியானது. ஆனால், தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானதால், ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி படம் மே 6ம் தேதி வெளியாகவிருக்கிறது.

மே 1ம் தேதி வெளியாகும் மம்மூட்டியின் `CBI 5'

மலையாளத்தில் மிகப் பிரபலமான படம் மம்மூட்டி நடித்த CBI. 1988ல் மது இயக்கத்தில் இந்தப் படத்தின் முதல் பாகம், 'ஒரு சி பி ஐ டைரி குறிப்பு' படம் வெளியானது. அதைத் தொடர்ந்து மேலும் மூன்று பாகங்கள் வெளியானது. இப்போது பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இதனுடைய 5 பாகம் உருவாகி இருக்கிறது.

5in1_Cinema : மீண்டும் திரைக்கு வருகிறார் நஸ்ரியா.. நானி வெளியிட்ட அடடே சுந்தரா பட அப்டேட்!

இந்த பாகத்தையும் மது தான் இயக்கியிருக்கிறார். மேலும் இதில் மம்மூட்டி உடன் ரெஞ்சி பணிக்கர், சௌபின் சாஹிர், ஆஷா ஷரத், சாய்குமார் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கான சென்சார் வேலைகள் முடிந்து யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி மே 1ம் தேதி வெளியாகவிருக்கிறது சிபிஐ 5.

`காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் அடுத்த பாடல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்திருக்கும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் ரிலீஸூக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படத்திலிருந்து டீசரும் மூன்று பாடல்களும் ஏற்கனவே வெளியாகிவிட்டது. தற்போது அடுத்த பாடலாக `திபம் தபம்' என்ற பாடலை வெளியிட இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு. படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

சித்தார்த் நடிக்கும் புதிய படம்!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் நாயகனாக சித்தார்த் நடிக்கிறார்.

நடிப்பதோடு சேர்த்து இந்தப் படத்தை தயாரிக்கவும் இருக்கிறார் சித்தார்த். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் உருவாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. மேலும் இது ஒரு பீரியட் படம் என சொல்லப்படுகிறது.

தமிழில் வெளியாகும் நானியின் `அடடே சுந்தரா'

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, நஸ்ரியா நசீம் நடித்திருக்கும் படம் `அன்டே சுந்தரானிகி'. இந்தப் படத்திலிருந்து நானி மற்றும் நஸ்ரியாவுக்கான டீசர் ஏற்கெனவே வெளியானது. விவேக் சாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திலிருந்து `பஞ்ச கட்டு' என்ற பாடலை சமீபத்தில் வெளியிட்டனர்.

படத்தை ஜூன் 10ம் தேதி வெளியிட உள்ளனர். தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்திலும் இந்தப் படத்தை வெளியிட உள்ளனர். தமிழில் இந்தப் படத்திற்கு `அடடே சுந்தரா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் டீசர் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது.

banner

Related Stories

Related Stories