சினிமா

புனீத்ராஜ்குமாரின் குரலிலேயே ரீ ரிலீஸாகும் ஜேம்ஸ்.. திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்.. எப்படி தெரியுமா?

புனீத்ராஜ்குமாரின் குரலிலேயே ரீ ரிலீஸாகும் ஜேம்ஸ்.. திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்.. எப்படி தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சந்தோஷ் சிவனின் `ஜேக் அன்ட் ஜில்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வது மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் இருக்கிறார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலையாளப் படம் `ஜேக் அன்ட் ஜில்'. இதில் காளிதாஸ், மஞ்சுவாரியர், சௌபின் சாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மே 20ம் தேதி படம் வெளியாகவுள்ளது. மேலும் நாளை இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மோகன் லால் வெளியிட உள்ளார்.

`ஜன கன மன' படத்தின் முதல் பாடல்!

ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ப்ரித்விராஜ் - சுராஜ் நடித்திருக்கும் மலையாளப்படம் ஜன கன மன. ப்ரிவிராஜ் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வரும் நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புனீத் குரலுடன் மறுவெளியீடாகும் `ஜேம்ஸ்'

சேத்தன் குமார் இயக்கதில் புனீத் ராஜ்குமார் நடித்த ரிலீஸான படம் `ஜேம்ஸ்'. புனீத் ராஜ்குமாரின் எதிர்பாரா மறைவைத் தொடர்ந்து இந்தப் படம் வெளியிடப்பட்டது. கர்நாடக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்தப் படத்தில் புனீத் ராஜ்குமாருக்கு, அவரது அண்ணனும் நடிகருமான சிவராஜ்குமார் டப்பிங் பேசியிருந்தார். தற்போது தொழிநுட்ப உதவியுடன், புனீத் ராஜ்குமாரின் குரலையே உருவாக்கி படத்தில் இடம்பெற செய்துள்ளனர். எனவே புனீத் குரலுடன் `ஜேம்ஸ்' படத்தை மறுவெளியீடு செய்ய உள்ளனர்.

அமேஸானில் வெளியாகும் `ஹவுஸ் ஆஃப் கூச்சி'

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் லேடிகாகா, ஆடம் ட்ரிவர், அல்பசீனோ என ஹாலிவுடின் முன்னணி நடிகர்கள் நடித்த படம் `ஹவுஸ் ஆஃப் கூச்சி'. இந்தப் பாத்தின் கதையே `கூச்சி' என்கிற ப்ராண்ட், அதை உருவாக்கியவர்களிடம் இருந்து, வேறொருவருக்கு விற்கப்பட்ட நிகழ்வை மையமாக கொண்டது. சென்ற வருடம் திரையரங்கில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படம் அமேஸான் ப்ரைமில் மே 3ம் தேதி வெளியாகவிருக்கிறது.

வெளியானது சிரஞ்சீவி பட பாடல்!

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி - ராம் சரண், பூஜா ஹெக்டே நடித்துள்ள தெலுங்குப் படம். முதன் முறையாக ஒரு முழு நீளப்படத்தில் தந்தையும் மகனுமான, சிரஞ்சீவி - ராம்சரண் இணைந்து நடித்திருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கெனவே படத்தின் மூன்று பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது படத்தின் நான்காவது பாடலாக `பலே பலே பஞ்சாரா' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக உள்ளது.

banner

Related Stories

Related Stories