சினிமா

KGF 2-ஐ தாங்கி நிற்கும் தூணில் ஒன்று: Pan India படத்தை எடிட் செய்யும் வாய்ப்பை பெற்ற Fan made வீடியோ இதோ!

KGF 2-ஐ தாங்கி நிற்கும் தூணில் ஒன்று: Pan India படத்தை எடிட் செய்யும் வாய்ப்பை பெற்ற Fan made வீடியோ இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை உலகமே கொண்டாடி வருகிறது. திரையரங்குகளில் கூடுகள் காட்சிகள் ஏற்படுத்த ரசிகர்களே வலியுறுத்தும் அளவுக்கு படத்தின் மீதான ஆவல் மேலோங்கியிருக்கிறது.

முதல் பாகத்தை திரையரங்கில் பார்க்க தவறியவர்கள், பல முறை முதல் பாகத்தை பார்த்தவர்கள் என ஏராளமானோர் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

இது போக படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக கேஜிஎஃப் 2 படத்தின் படத் தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னியின் பங்கு பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில், முதல் பாகத்தின் பாடல் ஒன்றினை அதே படத்தின் காட்சிகளோடு வெட்டி ஒட்டி ரசிகனாக மெருகேற்றப்பட்ட fan made வீடியோவால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் பிரசாந்த் நீல், முதலில் kgf 2 ட்ரெய்லரை எடிட் செய்யச் சொல்லி இருக்கிறார்.

அவரது பணியால் திருப்தியான இயக்குநர் முழு படத்தையும் எடிட் செய்யும் பணியை வெறும் 19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னியிடம் ஒப்படைத்திருக்கிறார். குல்கர்னியும் தனக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட உபயோகித்து தனது எடிட்டிங் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தற்போது உஜ்வல் குல்கர்னி எடிட் செய்த fan made வீடியோ எது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தேடி வருகிறார்கள். அவர்களது கவனத்திற்காக அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories