சினிமா

KGF 2 வெற்றியில் முக்கிய பங்காற்றிய இந்த 19 வயது இளைஞன் யார் தெரியுமா?

KGF 2 வெற்றியில் முக்கிய பங்காற்றிய இந்த 19 வயது இளைஞன் யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈராண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று உலகம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம்.

முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மிகுந்த எதிர்ப்பார்ப்பில் தியேட்டர்களுக்கு படையெடுத்திருக்கிறது ரசிகர் பட்டாளம். அடுத்த ஒரு வாரத்திற்கு படத்துக்கான டிக்கெட் அனைத்தும் புக் செய்யப்பட்டிருப்பதால் எப்படியாவது படத்தை பார்த்தே தீரவேண்டும் என ஆவலுடன் பலரும் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் படத்தொகுப்பாளர் (எடிட்டர்) குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அந்த வகையில் உஜ்வல் குல்கர்னி என்ற வெறும் 19 வயதே ஆன வாலிபரே கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு உஜ்வல் குல்கர்னி தனது பாணியில் கேஜிஎஃப் பாடல்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். குல்கர்னியின் அந்த எடிட்டிங் பாணி இயக்குநர் பிரசாந்த் நீலை பெரிதளவில் கவர்ந்திருக்கிறது.

இதனையடுத்து கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரை எடிட் செய்யும் பணியை குல்கர்னி வசம் ஒப்படைத்திருக்கிறார் பிரசாந்த் நீல். இயக்குநர் எதிர்பார்த்தை விடவும் பிரமாதமாக ட்ரெய்லர் எடிட் செய்யப்பட்டதால் மொத்த படத்துக்கான படத்தொகுப்பு வேலையையும் உஜ்வல் குல்கரினையையே செய்யும்படி கூறியிருக்கிறார்.

அதன்படியே கேஜிஎஃப் 2 படத்தின் அனைத்து காட்சிகளையும் தனது எடிட்டிங் திறமையால் அற்புதமாக செதுக்கியிருக்கிறார் உஜ்வல் குல்கர்னி. தற்போது அவரது பணி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் வெறும் 19 வயதே ஆன இளைஞனிடம் உலகமே கொண்டாடும் படத்தின் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்த இயக்குநருக்கும் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள். குல்கர்னி போன்ற பல திறமைசாலிகள் இனி பிரசாந்த் நீல் போன்றோரால் கண்டறியப்படுவார்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லையென கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories