சினிமா

“ஓட்டுநரின் மகன் இன்று pan india star - சினிமாவில் தடம் பதித்த ராக்கி பாய்” : யார் இந்த யாஷ் ?

கே.ஜி.எஃப் 2 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

“ஓட்டுநரின் மகன் இன்று pan india star - சினிமாவில் தடம் பதித்த ராக்கி பாய்” : யார் இந்த யாஷ் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னட திரையுலகின் பிரம்மாண்ட படைப்பாக 2018ம் ஆண்டு டிசம்பர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கே.ஜி.எஃப்'. நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு கன்னட மொழி ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய இந்திய மொழி ரசிகர்கள் மத்தியிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்தப் படம் யாரும் எதிர்பாராத வகையில், 200 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து இரண்டாம் பாகத்திற்காக வேலைகள் விரைவிலேயே துவங்கியது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படபிடிப்பில் பாதிப்பு ஏற்பட்டது. பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து மீண்டும் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கே.ஜி.எஃப் 2படத்தில், தனது கதாபாத்திரத்தின் பெரும்பாலான வசனங்களை நடிகர் யாஷ் சொந்தமாக எழுதியுள்ளதாக, இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

“ஓட்டுநரின் மகன் இன்று pan india star - சினிமாவில் தடம் பதித்த ராக்கி பாய்” : யார் இந்த யாஷ் ?

இந்திய அளவில் ஒரே படத்தில் சினிமா உலகில் தனக்கென்று ரசிகர்கள் படையை பெற்று pan india star போற்றப்படும் நடிகர் யாஷ் சினிமாவில் கடந்து வந்த பாதையை பார்ப்போம்:

நடிகர் யாஷின் இயர் பெயர் நவீன்குமார கவுடா. அவரின் பெட் நேம்தான் யாஷ். பிறகு அதுவே ரசிகர்கள் எல்லோரும் அன்பாக அழைக்கும் பெயராக மாறிவிட்டது. இவரின் தந்தை கன்னட அரசு பேருந்தின் ஓட்டுநராக இருந்துள்ளார். ஓட்டுனரின் மகன்தான் இன்று பேன் இந்தியன் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பின்னர் கன்னட சின்னத்திரை சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். இவர் முதலில் நடித்த சீரியல் 'நந்தகோகுலா'. பிறகு சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

“ஓட்டுநரின் மகன் இன்று pan india star - சினிமாவில் தடம் பதித்த ராக்கி பாய்” : யார் இந்த யாஷ் ?

2008ம் ஆண்டுதான் முதல் முறையாக Moggina Manasu என்ற படத்தல் கதாநாயகனாக அறிமுகமாகி இதுவரை 21 படங்களில் நடித்துள்ளார். Kirataka, Googly படங்கள்தான் கன்னட திரையுலகில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. இவருடன் நடித்த ராதிகா பண்டிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது கே.ஜி.எஃப் படத்தின் மேலும் யாஷ் pan india star-க வளர்ந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories